பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அன்பு வெள்ளம்மேலே கூறப்பட்ட உரைபோல், 'அன்பிலே நடந்து கொள்ளுங்கள்' என்றால் என்ன பொருள்? ஏதோ அன்பு எனும் பாதை இருப்பது போலவும் அதிலே நாம் நடப்பது என்றா பொருள் கொள்வது? இல்லவே இல்லை?

'நடப்பது' என்பது காலால் நடப்பது என்பதல்ல. “வாழ்ந்து காட்டுதல்" "நடத்தையால் அன்பினைக் காட்டுதல்” என்று பொருள் கொள்வதுதான் சரியானது. எடுத்துக்காட்டாக ஒரு வாணிகம் செய்பவர் தன்னைப்போன்ற வாணிகரிடமோ நுகர்வோரிடமோ செய்யும் வாணிகம் அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதுதான்்!

கடவுள் எப்படி மாந்தர் தம்மை நடத்துகின்றரோ அதேபோல் தான் நாமும் மற்றவரை நடத்தவேண்டும். புலனுக்கு உட்பட்ட அறிவு நம்மை அதன் அடிமையாக்கி வைத்திருக்கிறது.

இன்று மாந்தராகிய நாம் பெற்றுள்ள அறிவு பொதுவாக, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் கற்றுத் தரப்பட்டவற்றினால் பெற்ற அறிவுதான். அதுவும்கூட நம் புலன்கள் ஐந்தின் மூலமாகப் பெறப்பட்டதுதான். அதாவது கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறியும் ஐம்புலன்களின் வாயிலாகப் பெற்ற கல்வி அறிவுதான்! நமது உடல் ஓர் அரிய ஆய்வுகூடம், அறிவு நாம் செய்யும் செயற் பயிற்சியின் மூலம் பெறப்படுவதேயாம்.

வெறும் புலனறிவு, உயிர் மெய்ம்மையை ஆவியின் ஆற்றலை அல்லது ஆன்மாவின் மதிப்பினை அறியாது. அறிந்தும் புலனறிவின் இடத்தை அன்பு பெற வைத்ததில்லை நாம். அன்பினை நாம் நமக்குத் தேவையானபோது மட்டுமே குழந்தை தேவைப்படும்போது பொம்மை ஒன்றுடன் ஆடுவது போன்று அன்பினை ஒரு கைப்பாவையாகக் கொண்டு விளையாடுகிறோம். எதுவும் முடியவில்லை என்றால் கடைசியாக அன்பினைக் கைகொள்ள முனைகிறோம்.

அப்படிக் கூடாது. புலனறிவுக்கு அப்பாற்பட்டு உள்ள அன்பினைப் புலனறிவின் இடத்தில் கொண்டு வந்திட வேண்டிய - நேரம் நமக்கு வந்துவிட்டது.

அன்பு நெறியினைச் சமூகம் எப்பாடுபட்டேனும் - மட்டு மீறிய முயற்சியால் தகர்த்தெறியப் பார்க்கிறது. நாட்டில் ஒழுங்-