பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

57


-கின்மையும் அமைதிக் கேடும் இனி தலைவிரித்து ஆடுகிறது; ஆடப் போகிறது. தறுதலை ஆட்சி நடத்தப் போகிறது.

ஒழுங்கின்மை என்பது என்ன? எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாதத் தன்னலம். தன்னலம் இருக்குமிடத்தில் இறைமை இருக்காது. அதன் விளைவு என்ன? மனிதர் தாமே தங்கள் வாழ்வில் வந்துற்ற அனைத்துச் சிக்கல்களைச் சிந்திக்காமல் தீர்க்க முனைந்துவிட்டனர். நம் சிக்கல்களைப் பண்பாளரிடம் விட்டு விடுவோம் என்பதனை மறந்தனர். அதனால்தான் ஒவ்வொரு மனிதனும் தன்னலம் மேலோங்கிய ஒழுங்கற்றவனாக ஆகி விட்டான்.

தன்னலம் நம்மில் தலைதூக்கி நிற்கையில்
மன்னலம் மாய்ந்து விடும்.

அன்பு வல்லந்தமாகக் கைப்பற்றுகிறது

"நீங்கள் ஏன் ஆப்பிரிக்க நாட்டுக்குப் போகிறீர்கள்?' என்று ஒருவர் ஆல்பர்ட் சுவைட்சரைக் கேட்டார். 'அன்பு என்னை அங்கே ஈர்த்தது. ஈர்த்த அன்பு என்னை துரத்தியது. அதனால் போகாமல் இருக்க முடியவில்லை"என்றார் அவர்.

இயேசுவின் அன்புக்கு ஆட்பட்ட ஒருவனுக்கு, உலகில் அதுபோன்ற ஆற்றல் வேறெதுவும் வந்து வாய்ப்பதில்லை. இயேசுவின் அன்பு நம்மைக் கட்டாயப்படுத்தி நம்முள் வந்து உறைகிறது - நிறைகிறது. அவ் அன்பு நம் உள்ளிருப்பது எதை எதைப் பேசிடக் கூடாதோ, எதை எதைச் செய்யக் கூடாதோ, அவற்றைச் சொல்லி நம்மைத் தடுத்து நிறுத்துகிறது. அதனால் நாம் எதைச் செய்யலாம், எதை வழங்கலாம் என்பதை நாம் அறிந்து செய்ய உதவுகிறது அன்பு!

இயேசுவின் அன்பு ஒருவரின் ஆவியினை அடக்கி ஆள்கிறது, இயக்குகிறது. எண்ணுவதுகூட அவர் அன்பினால்தான்் எனும்படி, ஒருவர் இயேசுவின் மாந்தராகிறார். தன்னையும் அறியாமல் அதே மாந்தர் எதை நினைத்தாலும் அன்பினை முதலாகக் கொண்டே நினைக்கிறார். இயேசுவின் அன்பினைப் பெற்று இயேசுவின் அன்பர் ஆன பின்பு முன்பு தான் நினைத்த படி, சொல்லியபடி செய்தது போன்று, இப்போது பேசுவதில்லை; செய்வதுமில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/61&oldid=1515473" இலிருந்து மீள்விக்கப்பட்டது