உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

75


படைக்கப்பட்டுள்ள அனைத்துமே அன்பினை அடிப்படைக் காரணமாகக் கொண்டவைதாம்! உலகில் மனிதன் தோன்றி வாழ்வதற்குக் காரணமும் அன்புதான்! அன்பின் வழிதான் மாந்தர் பிறப்பெடுத்ததே! இதை எண்ணும் போது எத்தனை அழகானது நம் தோற்றமும் வாழ்வும் என்று வியக்க வேண்டியுள்ளது!

எ.பே. 3:17 "....... நீங்கள் அன்பிலே வேரூன்றி நிலை பெற்றவர்கள் ஆக இயேசுவின் அன்பிலே வேரூன்றி அவ்வன்பிலே நிலை பெற்றவர்கள் ஆகிவிட்டால், வாழ்க்கையில் ஏற்படும் எந்தப் புயலும் நம்மை எதுவும் செய்ய முடியாது!

ஒருவர் ஆழ்ந்த வருத்தத்தில் தோய்ந்தவராக இருப்பதை நான் கண்டேன். அவருடைய இல்லத்தில் இருந்தவர்கள் ஆன்மீகப் பற்றற்று அன்பற்றுப் போனதால் - அனைவரும் வாழ்க்கையில் சுக்கு நூறாகச் சிதறிக் கிடந்தனர். இனி கடைத் தேற்றமே அற்ற நிலைக்குச் சென்று விட்டனர்! உண்மையான புயல் அடித்து அதில் சிக்கிய வீட்டுக் கட்டடம்கூட இப்படிச் சிதறிச் சிறுமையாகி விட்டிருக்காது.

புயலால் பாதிக்கப்பட்ட அந்த இல்லத்தை விட ஆன்மீகப் பற்றற்றதால் அன்பற்ற தன்மையால் அவர்கள் உள்ளங்கள், நொறுக்கப்பட்டுத் தூள் தூளாகச் சிதறிக் கிடப்பதன் நிலை மிகக் கேடானது.

ஓர் இல்லதரசியைக் கண்டேன்; அவர் அமைதியான வடிவம்; பண்பின் கொடுமுடி! எப்போதும் எதற்காகவும் சீர்கெட்ட சொல்லை உதிர்த்ததே இல்லை. அவ் அம்மையாரின் வாயிதழ்கள் அம்மையாரின் உள்ளத்தில் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் வெறுப் புணர்ச்சியும் கொண்டதல்ல எனக்காட்டும். அவ் அம்மையார் தம் கணவரை அன்புடன்தான் விரும்பி வந்துள்ளார். அடங்கித்தான் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். அழகான வாழ்க்கையினையும் ஒழுங்கையும் அழித்து விட்டார் அவருடை கணவர்! அதுபற்றி அவர் மனைவி கொண்டுள்ள ஆறாத் துயரம் அளவிடற்கு அரியது. அந்த அம்மையாரின் அன்பு உள்ளம் இன்னும் அவருடைய கணவர் வருகையை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனை அவர் அறியாததால் அன்றோ, தம் மனைவியின் அன்பினைக் கொன்று விட்டார்; தூயதான் அன்பினை வதை செய்துவிட்டார்.

அன்பு அவர் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது. மனைவியின் கோலத்தில் இயேசு ஆண்டவர் மரித்தோரிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/79&oldid=1219747" இலிருந்து மீள்விக்கப்பட்டது