பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

79இத்துணை ஏன்? எல்லாம் வல்ல இறைமை நம்மோடு இருக்கிறது என்று எண்ணிப் பார்க்கக் கூட நாம் கருதுவதில்லை.

ஏசாயா 41:10, 'நீ அச்சப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் கடவுள்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்கு உதவி பண்ணுவேன்;என் அறத்தின் வலது கையினால் உன்னைத் தாங்குவேன்'

இப்படிச் சொல்லப்பட்டதோடு, மேலும் சொல்லப்படு வதைப் பாருங்கள். 'உன் இறை நான் அன்பாயிருக்கின்றேன். உன்னை விரும்பவிடு; உன்னில் அன்பு கூர்ந்திட விடு; உன்னையும் உன்னை உள்ளடக்கிய மானுடத்தையும் நான் வாழ்த்தியருளுவேன்' என்றெல்லாம் இறை மொழிகள் நம்மை அறிவுறுத்துகின்றன. ஏதோ ஒட்டுமொத்தமாக யார் பொருட்டோ சொல்லப்பட்டதா இது? இல்லை. மானிட உயிர்க்குக் கடவுளின் அன்பு மொழியல்லவா? இனியேனும் இவற்றை எல்லாம் நினைவிற் கொண்டு அன்பு உள்ளம் படைத்தவராவோம்.

நம்மில் ஏனோ அச்சம் குடிகொண்டுவிட்டது. அதனால்தான், அன்பு நம்மில் உள்ளிருந்து ஊக்குவித்துச் செயல்படு முன்னமே அன்புக் கனலை அனைத்துவிட்டோம். அன்பு எப்போதுமே இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று கட்டளையிடும் துணிவினைக் கொண்டதில்லை!

கணவன் மனைவி ஆகிய இருவருமே ஒருவர்க்கொருவர் சண்டையிடாமலிருக்கும் தந்திரம் ஒன்று தெரியுமா? பெரிய உள்ளம் வேண்டும்; அன்புள்ளம் வேண்டும்; தவறாகப் பேசியவர் தவறு செய்தவர் கணவனாக இருந்தால் மனைவியிடம், மனைவி யாக இருந்தால் கணவரிடம் "என்னை மன்னித்துவிடு. இனி நான் ஒருபோதும் அப்படிப் பேச மாட்டேன்; செய்ய மாட்டேன்" என்று அன்பாகச் சொல்லிப் பாருங்கள். பிறகு எப்படி சண்டையோ மனக் கவலையோ வருகிறது பார்க்கலாம்.

அன்பில்லாதவராக இருப்பீர்களேயானால் அதை ஒத்துக் கொள்ளுங்கள் முதலில். பிறகு அன்பில்லாத உங்கள் வெற்று நெஞ்சத்தில் அன்பினைக் கொண்டு நிரப்புங்கள். அதன் பின்பு பாருங்கள் உங்கள்.வீட்டில் உள்ளவர்களிடையே மனத்தாங்கல், வீண் சண்டை ஏற்படக் காரணமாயிருந்த உங்கள் செய்கைகளை நீங்களே நிறுத்தி விடுவீர்கள். பிறகு அன்பு நிலவும் ; நேயம் குலவும்