பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

85


போல எண்ணி, “அதோ! எடுத்துச் சாப்பிடு” என்று சொல்வார்கள். அது போன்றே உதவிக்கு வருபவரிடம் தூக்கி எறிவது போலவே கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களை நீங்களும் கண்டிருப்பீர்கள் எங்கும் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட கணவன் மனைவியர்! இத்துணை எதற்கு? தங்கள் குழந்தைகளிடம் பழித்துக் கொண்டே திட்டிக் கொண்டே எரிந்து விழுந்து கொண்டே கொடுக்கின்ற பெற்றோர்களும் இருக்கிறார்கள், கண்டிருப்பீர்களே.

மிச்சம் மீதி இருக்கின்ற ஒரு கெட்டுப் போன அப்பத்துண்டைக் கூட ஏதோ அறுசுவைப் பண்டம் தருவது போன்று எண்ணித் தருவார்கள்.

ஐந்தமுதம் படைப்பது போல் எண்ணிக் கொண்டு, பழைய கெட்டுப்போன சோற்றைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்வார்கள். பசியில் வாடும் ஏழைகள் என்ன செய்வர்? சாப்பிடுவர். ஆனால் சுவைத்துச் சாப்பிட்டிருப்பாரா அந்த ஏழை மக்கள், பசித்த மக்கள்?

அதுபோல் எல்லாம் கொடுப்பது தவறு; கூடாது. அது கொடுப்பதம் அன்று; உதவுவதும் அன்று. அதைவிடச் சும்மாயிருப்பது நல்லது. கொடுப்பவர், நல்லதைத் தரவேண்டும்; பெறுவரும், நல்லதைப் பெற்றுக் கொடுத்தவரை நன்றி நினைக்க வேண்டும். ஆகவே தான், யாருக்கு எதைக் கொடுத்தாலும் இயேசு அருளியதுபோல அளிக்க முடியாது ஆனால் இயேசுவைப் பின்பற்றி அளிக்கலாம் அல்லவா? நாம் ஏன் கொடுக்கிறோம்? கொடுப்பதில் பெறுபவர்க்கு நன்மையிருக்குமா? பெற்றுக் கொண்டவர் நன்றி நினைக்க வேண்டாமா? என்று எண்ணிப் பார்த்துக் கொடுத்திட வேண்டும். அன்பார்ந்த நெஞ்சம் கொண்டு கொடுத்திடுங்கள். உங்கள் பணியில் எத்துணை ஈடுபாடும் அன்பும் கொண்டு வெற்றி கொள்கிறீர்களோ அத்துணை அன்பும் மற்றவர்க்கு உங்களால் ஆகின்ற பணியில் உதவிபுரிவதில் இருத்தல் வேண்டும்!

எனக்குத் தெரிந்த ஒரு வணிகர், இராப்பகலாகக் கடுமையாக உழைத்தார். உழைத்ததால், உழைப்பின் பயனைக் கொண்டார்! வளம் பெற, பெற்ற வளத்தினைப் பேணிக் காத்திட, வளம் பெறச் செய்த பணியினைத் தொடர்ந்து நடத்திட இராப்பகலாக உழைத்து வந்தார். அப்படிப்பட்ட வளம் நிறைந்த செல்வ நாள்களில் அன்பைப் பற்றிய எண்ணமே இல்லை. அன்பு என்னும் ஓர் அற்புத ஆற்றல் இருப்பதாகக் கூட ஒரு நினைவில்லை. அன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/89&oldid=1219533" இலிருந்து மீள்விக்கப்பட்டது