பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

அன்பு வெள்ளம்


என்ற சொல்லையே கூட மறந்துவிட்டிருந்தார் அந்த வணிகர். அப்படிப்பட்ட நாள்களில் ஒரு பெண்மணியைக் காதலித்தார்; அவளையே மணந்து கொண்டார். அவளிடம் அன்பாக நடந்து கொள்ள முடியவில்லை, அதற்கு நேரமும் இல்லை. தொழில், பணம் இதில் தான்் கவனம் முழுவதும்! முதலில் அந்த வணிகரை மணந்து கொண்ட பெண்மணி, தன்னைக் காதலித்து மணம் புரிந்து கொண்ட கணவன், தொழிலிலும் செல்வம் சேர்ப்பதிலும் அதனைக் காப்பதிலுமே கண்ணுங் கருத்துமாயிருப்பதைக் கண்ணுற்றாள்; என்ன செய்வார் நம்மோடு கொஞ்சிக்குலவிட நேரம் போதவில்லை என்று தான்் எண்ணி ஆறுதல் பெற்றாள். தன்னைத் தானே ஆற்றிக் கொண்டாள்.

நாள்பட நாள்பட என்ன ஆயிற்று? தனிமையில் வாடினாள்: இளமையின் உள்ளப் பசியால் வாட்டப் பெற்றாள்.

குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைகளிடமாவது அன்பு செலுத்த அந்தத் தந்தைக்கு நேரம் இருந்ததா? நெஞ்சம் இருந்ததா என்றால் அறவே இல்லை. குழந்தைகளுக்குத் தேவைக்குமேற்பட்ட காசு - பனம் தந்து வந்தாரே தவிர அன்பினைக் காட்டவில்லை. சீராட்டவில்லை அதற்கு மாறாகக் குற்றம் கூறினார் அந்தக் குழந்தைகளின் மேல்; கடுகடுத்த முகத்துடன் கடுஞ்சொற்களை அள்ளித் தெளித்தார் அக் குழந்தைகளின் மேல்!

தன் வாணிகம் செழிக்கப் பணத்தில் கொழுக்க இராப்பகலாகப் பாடுபட்டாரே தவிர, சற்றேனும் மனைவி மக்களிடம் அன்பு காட்டினாரல்லர்! பல இலட்சங்களுக்கு உரிமையாளர் ஆனாரே தவிர, மனத்தில் இன்பம் இல்லை; அமைதியில்லை, சிந்தித்தார்.தன் குற்றத்தை உணர்ந்தார்; பணம் பத்துவகை செய்யும் ஆனால் பண்பையும் இன்பத்தையும் தராது என்று உணர்ந்தார்! ஏன் அவருக்கு இன்பமும் அமைதியும் இல்லை. அன்புள்ள மனைவி மக்கள்பால் அவருக்கு உறவு இல்லை; உறவுக்கான அன்பில்லை அதனால் அவருக்கு வீட்டில் இன்பமில்லை.

எனவே உங்கள் பணி ஆயிரம் இருக்கட்டும், செல்வம் ஆயிரம் பெருகட்டும், உங்கள் அன்பும் அந்த அளவுக்கு விட்டில் மனைவியிடம் மக்களிடம் பெருக வேண்டும். இல்லையேல் அந்த வணிகரைப் போன்று மனைவி மக்கள் இருந்தும் பயனில்லை. இன்பமும் அமைதியும் அற்றுப்போகும் மனைவிமக்கள் உங்கள்