பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

99

பகைவர் விண்ணுலகை அடையும்படி உருவப்பட்ட திண்மையான வாளையுடைய, ஈன்ற அணிமையுடைய பசுக் கூட்டத்தைக் கவர்ந்து வரும் வெட்சி வீரர்களுக்குத் தலைவன் போரினை வெல்லும் சோழன், அவனது பண்டங்கள் நிறைந்த பாக்கத்தில் சென்று மீளாத முழங்கும் கடலின் பெரிய துறையிடத்துள்ள அலைகளை விட, அவளிடத்து நாம் விடும் தூதுகள் ஒழியாமல் செல்வனவாகுக” என்று தலைவன் தன் நெஞ்சினை நோக்கிக் கூறினான்

447. நினையாதே தலைவியை

ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை
புணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ! - நெஞ்சே - தெனாஅது
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
பல் செருக் கடந்த செல் உறழ் தடக்கை
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ
நீர் இழி மருங்கில் கல் அளைக் கர்ந்த அவ்
வரையரமகளிரின் அரிய்ள்
அவ் வரி அல்குல் அணையாக்காலே!

- மதுரைக் கணக்காயனார் அக 342

“நெஞ்சே! தெற்குத் திக்கில் உள்ள போர் வெல்லும் பாண்டியரின் நல்ல நாட்டில் உள்ள மண்ணினால் ஆன புற்றுடைய காட்டரணின் இடத்தைத் திறத்தலுடன் பகை வரின் பசுக்களைக் கவர்ந்து கொள்ளும் பழைய ஊரினரான கள்வர்க்கு முதல்வன்; பகைவரின் அரிய ஆண்களை அழித்த வன்மையுடன் பருந்துகள் வந்து கூடப் பல போர்களிையும் வென்ற குடியுடன் மாறுபடும் பெரிய கையையும், என்றும் கெடாத நல்ல புகழையும் உடையவன் பாண்டியன். அவன்து தோண்டப்படாத அருவி வீழும் பொய்கையையுடைய மலைக் குகையில் மறைந்த வரையர மகளிர் போல் அழகிய வரி-