பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

விளங்கும் இதன் காரணம் யாது? எனத் தோழி தலைவனின் இயல்பை இகழ்ந்து கூறினாள்

நம் தலைவன், தன் கொடையை விரும்பி வந்தவர்க்குத் தேரை அளிக்கும் வளவிய கையை உடையவன் அவன் தன் மலையில் உள்ள நீரை விட மென்மை உடையவன் ஆதலால் மணந்து கொள்ளாமல் நமக்கு மிக்க துன்பம் உண்டாகும் படி செய்வானோ? செய்யான் மணந்த கொள்வான் என்று தலைவி கூறினாள்

நாம் அணிந்த அணி நெகிழ்ந்து விழும்படி நம்மை வருத்தியவனின் குன்றாக இருந்தும், பக்க மலைகளின் மேல் வைத்த தேனையுடைய தேனிறால் முகிலில் நுழையும் நில வினைப் போல் தோன்றும் இதற்குக் காரணம் என்ன?” என்று தோழி இயற்பழித்தாள்

இவ்வாறு தோழி இயற்பழித்ததற்குப் பொறுக்காத வளாய்த் தலைவி, “தோழி! ஓயாமல் அவன் கொடுமையைக் கூறாதே! என் நெஞ்சைத் தன் அன்பால் பிணித்தவன் மற்றவர் அஞ்சும் கொடிய செயலுக்கு அஞ்சாத அறமற்றவன் அல்லன்” எனக் கூறினாள்

தலைவி தன் நெஞ்சுடனே முன் மொழிந்து பின்பு, யாங்கள் பாட மறைந்து நின்று கேட்டான் தலைவன். மென்மையால் இனிய மார்புடைய அவன் தாழ்ந்த கரிய கூந்தலை உடைய என் தோழிக்குத் தன் வருகையை எனக்குத் தெரிவிக்க வேண்டா எனக் கை கவித்துக் காட்டினான் காட்டி, பின் புறங்கழுத்தைச் சேர அவ்வளவில் என் மேனியில் பரவியிருந்த பசலை, கதிரவன் முன் இருள் போலக் கெட்டது என்று யாம் அங்ஙனம் பாடவும், அவன் சிறுபுறம் சாராத தால் மேனியின் பசலை மாயாது நின்றது என அவன் பிரிந்த போது கலங்கினாள்

465. தலைவி தோள்கள் பொலிவு பெற்றன

வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்,
ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம்,