பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

133ஐயனை ஏத்துவாம் போல, அணி பெற்ற
மை படு சென்னிப் பய மலை நாடனை,
தையலாய் பாடவாம், நாம்.

தகையவர் கைச் செறித்த தாள்போல் காந்தள்
முகையின்மேல் தும்பி இருக்கும் பகை எனின்,
கூற்றம் வரினும் தொலையான, தன் நாட்டார்க்குத்
தோற்றலை நாணாதோன் குன்று.

வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம்,
இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும்
வருடைமான் குழவிய வள மலை நாடனைத்
தெருள் தெரியிழாய்! நீ ஒன்று பாடித்தை.

நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக்
கண் பொதி பாளை கழன்று உகும் பணிபிற்றே
மாறுகொண்டு ஆற்றார்எனினும், பிறர் குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று.

புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட
புணர் மருப்பி எழில் கொண்ட வரை புரை செலவின்
வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை
மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை.

கடுங் கண் உழுவை ஆடி போல வாழைக்
கொடுங்காய் குலைதொறுஉம் தூங்கும் இடும்பையால்
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்,
தன் மெய் துறப்பான் மலை.
என ஆங்கு
கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு
வாடிய மென் தோளும் வீங்கின
ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே. - கலி 43

மங்கையே! நாம் இருவரும் ஐவனமாகிய வெண்ணெல்லைப் பாறை என்ற உரலில் இட்டுப், புலியைக் கொன்ற மதமுடைய புகர் பொருந்திய யானையினது கொம்பாலும், இனமான வண்டுகள் ஒலித்துத் தாது ஊதும் சந்தன மரத்தாலும் ஆகிய உலக்கைகளால் குற்றி, முருகனைப் புகழ்வது