பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

போல் அழகு பெற்ற முகில் உண்டாகின்ற தலைமைத் தன்மையுடைய பயன் பொருந்திய மலை நாட்டை உடையவனைப் புகழ்ந்து பாடுவோம்

(இஃது ஆற்றாத தலைவியை விளையாட்டில் ஈடுபடுத்தி ஆற்றுவித்தற் பொருட்டுத் தோழி அழைத்தது)

பகை என்று கூறினன் இயமன் எதிர்வரினும் புறம் கொடாதவன்; தன்னை உறவு கொண்டவர்க்குத் தோற்றலை நாணாதவன் இவ் இயல்புடைய தலைவனின் மலை; அதில் தும்பி, மங்கையின் கையில் அணிந்த தான் கூட்டான நீலக் கடைச் செறி போன்று, காந்தள் அரும்பின் மீது அஃது மலரும் காலத்தை எதிர் பார்த்திருக்கும்

ஆராய்ந்தெடுத்த அணிகலன் அணிந்தவளே! அகன்ற பாறைவில் உள்ள கருங் குரங்கைச் சேர, வெருண்டு பார்த்து இருள் பொதிந்த பக்க மலையில் ஏறி இறங்கி ஆடும் வருடை மானின் குட்டிகளை உடைய வளம் கொண்ட மலை நாடனைப் புகழ் விளங்க நீ ஒன்று பாடுவாய் என்றாள்.

செல்வம் முதலியவற்றால் மாறுபாடு கொண்டு அவற்றைப் பொறுக்காதிருப்பர் எனப் பலர் கூறினும் மற்றவர் குற்றத்தைக் கூற அறியாதவனின் மலை, நுட்பமான பொறியை யுடைய மானின் செவியைப் போன்று மூங்கிலின் முளையின் கணுவை மூடிய பாளை கழன்று கீழே விழுகின்ற பண்பை உடையது என்று தலைவி சொன்னாள் f

தோழி கூறுகின்றாள்; பெண் யானையுடன் சேர்ந்துள்ள இயல்புடைய யானை, வளகு என்ற புதலின் தழையை மனம் பொருந்தித் தின்னும் இணையான கொம்புகள் அழகு கொண்டவை மலை நடந்தது போன்ற நடையினால் விளங்கும் அழகுடையது. இத்தகைய யானைகளை உடைய பயன்மிக்க மலை நாடனை நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே! முன் இயற்பட மொழிந்ததை மாற்றி இனி இயற்பழித்து ஒன்று படுவாயாக

அதைக் கேட்ட தலைவி சொல்லலானாள். வறுமையால் பொருள் இல்லாமையைக் கூறியவர்க்கு அப் பொருளை அவர்க்குக் கொடுக்க முடியாத போது தன் உடலைத் துறப்பவனது மலை அஞ்சாமையுடைய புலியினது அடியைப்