பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

எதிர் எதிராய் ஓங்கிய மலையின் அகன்ற சாரல், அதில் ஞாயிற்றின் விரியும் செறிந்த கதிர்கள் அழகைத் தன்னிடம் உடைய மாணிக்கப் பாறையில் நிற்கப்பட்டு முழங்கும் ஒசையை உடையனவாய் இரண்டு மலையினின்றும் இறங்கும் அருவி, வேங்கை மரத்தின் அழகிய கொம்புகளின் மீது வீழ்தலால் முதிர்ந்த கொத்துகள் அலரும் அதன் அடிப்பகுதி முழவு போன்றது தீயைப் போன்றது அது, புள்ளியை உடைய மத்தகத்தையும் அழகையும் உடைய யானைகள் பூவுடன் கூடிய நீரை மேலே சொரிய, எக் காலத்திலும் தாமரை மலரின் அழகையுடைய உள் இதழிலே வீறுடன் திருமகள் விரும்பி யிருத்தலைப் போல் விளங்கும். இத்தகைய தேன் மணக்கும் வெற்றியையுடைய வெற்பனே!

என் தோழி - தலைவி - தன் வருத்தம் மிகவும், நீ செய்த அருள் இல்லாமையைச் சேரியில் உள்ளவரும் அறிந்து கொள்ளாதபடி மறைத்தாள் அவள் இங்ஙனம் மறைத்தது நின் அருள் இல்லாமையைப் - பிரிவைக் - கேட்கும் அப் போதே நீ நிலையான தன்மை கொண்டவன் இல்லாதவன் என்று யான் மற்றவர்க்குச் சொல்லி விடுவேன் என்பதற்கு அவள் நாணம் கொண்டதால்

என் தோழி காமநோய் வருத்துதலால் வருந்தியும் நீ செய்த அருளற்ற செயலைத் தன் தோழியர்க்கும் தெரியாது மறைத்தாள் அவள் ஏன் இங்ஙனம் மறைத்தாள்? நினது அருளற்ற தன்மையைக் கேட்டு மாயத்தில் வல்ல உனது பண்பு இல்லாத இயல்பை மற்றவர் கூறுவரே எனத் தான் நாணியதால்

உன் தீமையால் உண்டாகிய அரிய துன்பத்தைப் பிறர் அறியாத வண்ணம் நினைத்து உனக்குப் பழி தோன்றாது காத்தவளின் அறிய துயரத்தைத் தீர்க்கும் மருந்தாய் நாம் விரைந்து செல்வோம்!

467. மணமுயற்சியை மேற்கொண்டான் தலைவன்

விடியல் வெங் கதிர் காயும் வேய் அகல் அறை,
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை,
அரு மணி அவிர் உத்தி அரவு நிர் உணல் செத்து,