பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

அங்ஙனம் அவன் இரந்து நிற்பினும் உலகத்தையெல்லாம் காப்பவனைப் போல் வலிமையையும் உடையவன். மெய்ப் பொருள் நூல் வல்லவரை வழிபட்டு நின்று அப் பொருளை அறிந்தவனைப் போல் நன் மக்களிடம் என்றும் அடக்கமான குணத்தையும் உடையவன் வறியவரின் வறுமைத் துன்பத்தைத் தன் கொஇைத்தன்மையால் போக்க வல்லவனைப் போல் விளங்கும் வண்மையும் உடையவன் அத்தகைய முரண்பட்ட தன்மையுடைய அவன் தனக்குரிய ஆளுமையைக் கைவிட்டு என்னைப் பார்த்துச் சொல்லும் மாட்சிமைப்படும் சொல்லைக் கேட்பாயாக:

நறுமணமிக்க நெற்றியை உயைடவுளே! அவன் உன்னை அல்லாது உயிர் வாழமாட்டேன் எனக் கூறுகின்றான். அங்ஙனம் இறந்துபடும் தன்மையை உடையவனின் சொல்லை நம்புதல் யார்க்கும் அரிது அங்ஙனமாயின் என்னைச் சேர்ந்த வருத்தங்கள் பிறர்க்கும் உனக்கும் உளவோ? இல்லையன்றே? அவன் யான் வருந்துகின்றேன் நீ அதனை அறியாயோ என்று கூறி நிற்கின்றான் அங்ஙனம் நிற்பானாயின் தமக்கு உயிர் போல் சிறந்த தோழியருடன் ஆய்ந்து துணியாமல் தனியாய் இருந்தே முடிவு செய்தல் அரிதாய் உள்ளது. அங்ஙனமாயின் இந் நிலைமையில் அவன் வலையில் அகப்பட்டவர் சிலர் எம்மைப்போல் இரங்கத்தக்கவராய் இருப்பாரோ இரங்கா திருப்பர் அன்றோ!

அவன் நீ இரங்காது போனால் யான் உயிர் வாழ மாட்டேன் என்கின்றான் நல்ல குடிப் பிறந்த மகளிரை ஏழையர் என்பது ஆராய்ந்து அறிய வல்லவர் அல்லர் என்று எண்ணியேயாகும் அச் சொல் எனக்குப் பொருந்தும் அப்பழி பேரறிவுடைய உனக்குப் பொருந்தாது ஆகவே நாம் இருவரும் அவனைப் பற்றி ஆராய்ந்து ஒன்றைத் துணிவோம்

நம்மை நாணம் வருத்துவதால் அவனைத் திரும்ப அனுப்புதல் நமக்குப் பொருந்தாது இறந்துபடுபவனைப் பேணினார் என்று நன் மக்கள் புகழ்ந்து கூறுதல் நின் கருத்தின்படி பெண் தன்னையும் ஆகாததாய் உள்ளது இங்கனமாகவும் அவன் உன்னைத் தழுவும் அளவுக்குத் துணிவு கொண்டுவிட்டான் அதனை நீயும் ஏற்பதில்லை