பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

யானை. அஃது அம் மலையில் செறிந்த இலையினைக் கொண்ட வாழை மிக்க இடத்தில் புகுந்து அங்கு வருடை மானின் குட்டி பரந்த திரியும் இடத்தில் கதிரவன் தோன்றும் விடியற் காலத்தில் உறங்கும் இவ் இயல்பு வாய்ந்த இருள் மிக்க சோலையையும் விளங்கும் நீரையும் உடைய மலையை உடையவனே!

பாம்பின் பொறி போல் விளங்கம் பொறிகளும், பகைவரை வருத்தும் வலிமை உடைய வில்லின் மீது வைத்த கையை உடையவனாய் நின்று, வரிசையான வளையல் அணிந்த கையையுடைய என் தலைவியைக் காமக் குறிப்பு அவளுக்கு உண்டாகும்படிப் பார்த்தாய் தினையில் வந்து பொருந்தும் கிளிகள் பரவும் பசுமையான கதிரையுடைய தினைப்புனத்தில் கிளியை ஒட்டுதலை மறக்கச் செய்தாய்; உன் வயத்தவள் ஆக்கினாய். அங்ஙனமாயின் இனி நீ இடைவெளி இன்றி நினைப்பதை இவள் விரும்புவாள். இவள் பல குலை களையுடைய பலாவின் பிசின் உள்ள இடத்தை உடைய இனிய பழம் விழுந்து கிடக்கும் பாறையில் எடுத்து உண்ணும் உணவையும், பெருஞ் சோற்றுத் திரளையும் உடையது சிறு குடி இச் சிறுகுடியில் இருக்கும் பிள்ளையால் வறுமை அடைந்தாரின் செல்வத்தையுடைய மகள் இவள். ஆதலால் உன்னைப் பிரிந்து வருந்துவதை ஆற்றாதவன்

நீ காற்றை விட விரைவாகச் செல்லும் தொழிலில் வல்ல தேரையும், ஆண் யானையையும் உன்னிடம் வந்த புலவர்க்குக் கையொழியாமல் கொடுப்பதால் மழையைவிட அருள் மிக்காய் ஆதலால் நானும் சுரபுன்னை வளர்ந்த மலைச் சாரலில் திரியும் வருடை மானின் நல்ல குட்டியை வளர்ப்பவரைப் போல் நீங்காமல் பாராட்டி அவளிடமிருந்து பிரிவாய் அதனால் மேகலை அணிந்த அல்குலையுடைய என் தோழியது அழகும் நீங்கும் அதற்காகக் கடிதாகிய குதிரை மேலும் கடிதாகச் செலுத்தும் தாற்றுக்கோல் போல் சிறிதும் கொடியவனாய் இல்லாமையை அறிந்திருந்தும் அவளை உன்னிடத்தே சேர்ப்பேன் என்றாள் தோழி