பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி



மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளியல் வேண்டுவல், யான்
‘அன்னையோ? - மண்டு அமர் அட்ட களிறு
அன்னான்தன்னை ஒரு
பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ?

ஒண்தொடி நாண் இலன் மன்ற இவன் -
ஆயின், ஏஎ!

‘பல்லார் நக்கு எள்ளப்படுமடல்மா ஏறி,
மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறுநுதல்
நல்காள் கண்மாறிவிடின் எனச் செல்வானாம்
எள்ளி நகினும் வரூஉம்; இடைஇடைக்
கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது
கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன்
உள்ளம் குறைபடாவாறு. - கலி 61

தலைவன் தம்மிடம் வருவதைப் பார்த்துத் தலைவிக்கு, “ஏடி இவன் ஒருவன் என்ன குறை உடையவன்? இவன் கேட்டைப் பார்! அறிவுடையவர் தம் செல்வம் முடிவை அடைவதால் வறுமை அடைந்து தம் வருத்தத்தைப் போக்கும் உறவினரிடத்தே போய்த் தம் குறையை வாய்விட்டுக் கூறத் தொடங்கிப் பின்பு தாம் சொல்ல எண்ணியதைச் சொல்ல மாட்டாமல் இருப்பதைப் போல், தான் சொல்லக் கருதி யதைச் சொல்லாமல் என்னைப் பல முறை பார்ப்பான் பின் யான் அவனைப் பார்க்கின் தான் மெல்லெனத் தலை குனிந்து நிற்பான்” என்று சொன்னாள். }

பின்பு தோழி தலைவனிடம் சென்றாள் அவனை நோக்கி, “ஏடா! நீ குறிப்பால் எம்முடன் நட்புக் கொண்டாற் போன்று எங்கட்கு அறிவித்தபடி உன்னைவிட்டு நீங்காத நிழலைப் போல் என்னை விட்டு நீங்காமல் திரிபவனே! நீ பெறாத குறை யாது? அதனை இன்னது என்று சொல்.” என்றாள் இவ்வாறு தோழி தலைவி செவியால் கேட்பத் தலைவனை வினவினாள்

நான் என் குறையைக் கூறினால் இவள் மறுக்காதிருப் பாளோ? எனத் தலைவன் தன் நெஞ்சுடன் உசாவினான்.