பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
488. தோழி அறத்தொடு நிற்றல்

அன்னாய், வாழி வேண்டு, அன்னை ஒள் நுதல்,
ஒலி மென் கூந்தல், என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும்,
வேறு பல் உருவின் கடவுட் பேணி,
நறையும் விரையும் ஒச்சியும், அலவுற்று,
எய்யா மையலை நீயும் வருந்துதி
நல் கவின் தொலையவும், நறுந் தோள் நெகிழவும்,
புள் பிறர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும்,
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர்
செப்பல் வன்மையின் செறித்து, யான் கடவலின்.

தலைவியின் அன்பு மிகுதி

“முத்தினும் மணியினும் பொன்னினும், அத் துணை,
நேர்வரும் குரைய கலம் கெடின், புணரும்;
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்,
மாசு அறக் கழிஇ வயங்கு புகழ் நிறுத்தல்,
ஆசு அறு காட்சி ஐயர்க்கும், அந் நிலை,
எளிய என்னார், தொல் மருங்கு அறிஞர்;
மாதரும் மடனும் ஒராங்குத் தணப்ப,
நெடுந் தேர் எந்தை அருங் கடி நீவி,
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என,