பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ?
ஆற்றின் வாரார் ஆயினும், ஆற்ற .
ஏனை உலகத்தும் இயைவதால், நமக்கு’ என
மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று,
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்,

மண நிகழ்வை தோழி அறிவித்தல்

இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல,
இரு பேர் அச்சமொடு யானும் ஆற்றலென்;
கொடுப்பின் நன்கு உடைமையும், குடி நிரல் உடைமையும்,
வண்ணமும், துணையும், பொரீஇ எண்ணாது,
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல் ஆன்றிசின்; சினவாதீமோ!

தினைப்புனம் காத்தல்


“நெற் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை,
முத்து ஆர் மருப்பின் இறங்குகை கடுப்ப,
துய்த் தலைவாங்கிய புனிறு தீர் பெருங் குரல்
நல் கோட் சிறு தினைப் படு புள் ஒப்பி,
எல் பட வருதியர்” என நீ விடுத்தலின்,
கலி கெழு மரமிசைச் சேணோன் இழைத்த
புலி அஞ்சு இதணம் ஏறி, அவன,
சாரல் சூரல் தகை பெற வலந்த,
தழலும் தட்டையும் குளிரும், பிறவும்,
கிளி கடி மரபின ஊழ் ஊழ் வாங்கி,
உரவுக் கதிர் தெறுஉம் உருப்பு அவிர் அமயத்து-

சுனையில் நீராடல்

விசும்பு ஆடு பறவை வீழ் பதிப் படர,
நிறை இரும் பெளவம் குறைபட முகந்து கொண்டு,
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்,
முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு,