பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

183



நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி,
இன் இசை முரசின், சுடர்ப் பூண் சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்க இலை எஃகின்,
மின் மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்தென
அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு தெள்நீர்,
அவிர் துகில் புரையும், அவ்வெள் அருவி,
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி,
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவழி,
நளி படு சிலம்பின், பாயம் பாடி,
பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம்
பின் இருங் கூந்தல் பிழிவனம் துவரி,
உள்ளகம் சிவந்த கண்ணேம்.

வள் இதழ் மலர்களைப் பறித்து குவித்தல்

வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்துாழ், கூவிளம்,
எரி புரை எறுழம், கள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடி கமழ் நெய்தல்,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், றுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாட் தாமரை,