பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொகை - வகை - உரை த. கோவேந்தன்

51

மாலை வருதல் வேண்டும் - சோலை
முளை மேய் பெருங் களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. - பரணர் அக 148

"யானை, பனைமரத்தைப் போன்று பருத்த கையை உடையது கொல்லும் சினம் நீங்காத செருக்குப் பொருந்திய வலிமை கொண்டது வண்டுகள் மொய்க்கும் மதம் உடையது உயர்ந்த கொம்பையுடையது அது குளிர்ந்த மணமுடைய பக்க மலையில் உள்ள மரம் விழ ஒடித்துத் தள்ளும் புலியைக் கதறுமாறு குத்தி அதன் வெற்றியைத் தொலைக்கும் பின் தினை விளைந்த பெரிய புனத்தைக் கவர்ந்து கொள்ளும் இத்தகைய இயல்பையுடைய நாடனே! விரைந்த செலவு மிக்க குதிரை யுடையவன் ஆய் எயினன்’ அவன் பெரிய தேரையுடைய மிஞிலி என்பானுடன் போர் செய்து போர்க்களத்தில் இறந்தான் பறவைகளின் பாதுகாவலன் அவன் அத்தகையவனை மற்ற பறவைகளைப் போல் காண இயலாத பகற் குருடான கூகைப் பறவை நாணிக் கடும் பகலில் இயங்காமல் துன்பம் அடைந்தது. அதுபோல் இத் தலைவிக்குப் பகற்குறியில் செல்லாத துன்பம் பெரிதாக உள்ளது. அதனால் சோலையில் உள்ள மூங்கில் குருத்தினைத் தின்னும் பெரிய களிறு திரியும் மலைச்சாரலில் உள்ள சிறிய பாறைகள் செறிந்த வழியில் நீ மாலையில் வருதல் வேண்டும்” என்றாள் தோழி.

408. கூந்தலும் தோளும் துன்பம் தருகின்றன

நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து
குன்றுழை நண்ணிய சிறுர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் -
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசைச்
சினம் கெழு தானை தித்தன் வெளியன்
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடையக் கடந்த வென் வேல்