பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



52

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

இசை நல் ஈகைக் களிறு வீசுவண் மகிழ்ப்
பாரத்துத் தலைவன் ஆர நன்னன்
ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில்
களி மயிற் கலாவத்தன்ன, தோளே -
வல் வில் இளையர் பெருமகன், நள்ளி
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
கடவுட் காந்தளுள்ளும், பல உடன்
இறும்பூது களுலிய ஆய்மலர் நாறி,
வல்லினும், வல்லார் ஆயினும் சென்றோர்க்குச்
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும்,
}மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
வேய் அமைக் கண் இடை புரைஇச்

சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.
- பரணர் அக 152

‘நெஞ்சே! நம் மனம் நடுங்குவதற்குக் காரணமான வேறொன்றால் தீர்வதற்கு அரிய துன்பமானது நீங்க வந்து கூடினாள் தலைவி. பின்பு குன்றில் பொருந்திய தன் சிறிய ஊர்க்குத் திரும்பிச் செல்கின்றாள். அவள் வளைந்து சுருண்ட கூந்தலள் தித்தன் என்பான் பாணரைப் புரந்த பெரிய புகழினன்; சினம் மிக்க படையினன்; அவனது ஒலிக்கும் நீர்ப்பரப்பை உடைய கானலம் பெருந் துறைப்பட்டினத்தில் பொன்னைக் கொண்டு வரும் மரக்கலம் சிதையுமாறு தாக்கும் இறால் மீன் கூட்டம் அந்த இறால் மீன் கூட்டத்தைப் போன்ற மிக்க பகையைத் தரும் பிண்ட்ன் என்பானின் போர் செய்யும் மாறுபாடு அழிய அவன் படையை வென்ற வெற்றியைப் பெற்ற, வேலைக் கொண்டவன் நன்னன், அவன் புகழ் பொருந்திய ஈகையுடையவன்; ஆண் யானைகளை எவர்க்கும் கொடையளித்து மகிழ்பவன்; பாரம் என்ற ஊரின் தலைவன்; மாலை குடியவன் அவனது 'ஏழில்’ என்ற மலையின் ‘பாழி’ என்னும் பக்க மலையில் உள்ள மயில்களின் தோகைகளை தலைவியின் கூந்தல்கள் ஒத்தன.

பெரிய வன்மையான வில்லையுடைய வீரர்க்குத் தலைவனான நள்ளி என்பவனின் சோலைகள் மிகுந்த பக்கமலையில் வண்டுகள் தேன் உள்ள மலர்ந்த கடவுள் சூடுவதற்குரிய