பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன்

57

பேரின்பம் அடைந்து கழிக்கின்றோம் ஆயினும், 'பல்லான் குன்றம்' என்ற பெயரைப் பெற்ற மலையில் பொருந்தும் நிழலில் உள்ள நல்ல பசுக்கூட்டப் பரப்பைக் கொண்டது கழுமூர். அவ் ஊரில் வள்ளன்மையாகிய கடமை மேற் கொண்ட நடுவுநிலைமை பிறழாத நல்ல நெஞ்சினை யுடைய உதியன் என்பவரின் சமையல்கட்டினைப் போன்று அருவிகள் ஒலி மிக்கெழுந்து ஆரவாரம் செய்யும். இத்தகைய பெரிய மலையின் பக்க மலையில், ஆண் யானை ஈன்றணிமையுடைய பெண் யானையைத் தழுவிக்கொண்டு அசையும் நடையைக் கொண்ட கன்றினது பக்கத்தே இருந்து அதன் உறக்கம் கெடாமல் காவல் செய்யும் அஞ்சாமை உடைய வாள் போன்ற வரிகளை உடைய வலிய புலி தான் தங்கியிருக்கின்ற முழை தனித்திருக்கப் புறத்தே சென்று குகைவாயினில் போய் முழங்கும் வேட்டுவரும் உறங்குவர் இத்தகைய இயல்புடைய நள்ளிரவில் விலங்குகள் உலவும் சிறிய வழியில் நீ வருவதை இனி ஒழித்திடல் வேண்டும்” என்று இரவுக் குறிவந்த தலைவனைத் திருமண ஏற்பாடு செய்யத் தோழி இயம்பினாள்.


412. அன்பற்றவன் நீ என அறிந்திலேன்

வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
இன் இசை இமிழ் இயம் கடுப்பு, இம்மெனக்
கல் முகை விடர் அகம் சிலம்பு, வீழும்
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன்
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு தன்
புல் வேய் குரம்பை புலர ஊன்றி,
முன்றில் நீடிய முழவு உறழ் பலவின்
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து
சாத் ஞெகிழியின் ஊன்புகழுக்கு அயரும்
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
அறியேன் யான்; அஃது அறிந்தனென் ஆயின்