பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை , த. கோவேந்தன்

59

பிடி மடிந்தன்ன கல்மிசை ஊழ் இழிபு
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப்
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டித் தாது உகப்
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வரக்
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து,
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு
உணர்ந்தன்ன புணர்ந்த நீயும், நின் தோட்
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும்
தவல் இல் உலகத்து உறை இயரோ - தோழி
'எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்
கொண்டல்வான் மழை பொழிந்த வைகறைத்
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' என
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை
முன் தான் கண்ட ஞான்றினும்
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே.

- பரனர் அக 178


தோழி! “வயிரம் போன்ற கூர்மையான மேல் நோக்கிய கொம்பையும் மூங்கிலது வேரைப் போன்ற பருத்த மயிரையும் உடைய ஒரு பன்றி அது பறை போன்ற கண்ணை உடைய நீர்ச்சுனையின் நீரைக் குடித்தது; நீலமணி போன்ற நிறம் கொண்ட அகன்ற இலையைப் பெற்ற சேம்புச் செடியின் மாவுப் பிண்டம் போன்ற கொழுமையான கிழங்கைத் தின்றது; பெண் யானை துயின்று கிடந்ததைப் போன்று கல்லின் மேல் வருத்தமின்றி இறங்கி வந்தது; ஆற்றினை அடுத்துள்ள நீர் ஊறும் இடத்தில் உள்ள புதரின் கிளை மீது வெண் நாரைகள் இருந்தாற் போன்று தோன்றுகின்ற வெள்ளிய கூதளஞ் செடியின் அசையும் கொத்தில் உள்ள மலரில் பொருந்தியது; அப்போது அம் மலரின் பொடிமேலே உதிர்த்தலால் பொன் உரைக்கும் கட்டளைக் கல்லைப் போல் அழகுறத் தோன்றி யது; கிளைக்கும் தினையின் கதிரை மேய்ந்தது; பின் இனிதாய் உறங்கியது

இத்தகைய இடமான நல்ல மலை நாட்டை யுடைய வனுடன், ஊடிப்பின்பு உணர்ந்திடும் நீயும் உன் தோளின்