பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

மூங்கில் போன்ற அழகு ஒழியாது உன் தலைவனுடன் சேர்ந்து வாழ்ந்து பின்னர் என்றும் கெடாத மறுமை உலகத்தில் தங்கி வாழ்வீராக' பகல் இரவு என்றில்லாது 'கல்' என்ற ஒலியுடன் முகில் பெருமழையைச் சொரிந்த விடியற்காலத்தே குளிர்ந்த பனியை யுடைய அற்சிரக் காலம், பனிக்காலம் தனித்திருப்பவர்க்குத் தாங்குவதற்கு அரியதாகும் என்று கனவிலும் பிரிவதை அறியான் மேலும் நன் நற்குணத்தால் முதன் முதல் தான் கண்ட நாளினும் பின்பு எந்த நாளிலும் அருள் செய்வான் ஆவன்” என்று வரைவு மலிந்து தோழி சொன்னாள்.


414. கார் வந்தது தலைவன் வரவில்லையே

பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து,
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇத்,
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல்
 வீளை அம்பின் இளையரொடு மாந்தி
ஒட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட,
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர,
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட!
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல்
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும்
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால்,
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய-
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ,
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
பெரு வரை நண்ணிய சாரலானே.

- கபிலர் அக 182

"வேங்கை மரத்தின் பொன் போன்ற பூங்கொத்துகளைச் சூடி., மூங்கிலால் ஆன வில்லைத் தோளில் இட்டு, இனிய பலாப்பழத்தின் சுளையினின்று விளைந்த தேனை இளைய ருடன் நிறையக் குடித்து, விலங்குகளைத் தப்பாமல் பற்றும்