பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் * 65


தவிர்வுஇல் உள்ளமொடு எஃகுத் துணையாக
கனைஇருள் பரந்த கல்அதர்ச் சிறுநெறி
தேராது வரூஉம் நின்வயின்
ஆர்அஞர் அரும்படர் நீந்து வோரே.
                    - ஆவூர்கிழார் மகனார் கண்ணகனார் அக 202

“விளங்கும் வெண்மையான அருவிகளை உடைய மலைப் பக்கம் அங்கு மென்மையான தலையைப் பெற்ற தன் பெண் யானையும் சுற்றமும் இன்பம் அடையும்படி, புலியாகிய தம்மை எதிர்த்த பகையைப் போரிட்டு வென்றதால் உண்டான விழுப்புண் மிக்கது ஆண்யானை. அது கற்கள் பொருந்திய அம் மலைப் பக்கத்தில் கிடந்து புண்ணின் வலியைப் பொறுக்க மாட்டாது தன் கையை உயர்த்திப் பெரு மூச்சு எறியும் அப்போது அம் மூச்சுக் காற்றுப்பட்ட மலர்க் கொத்துகளை உடைய வேங்கையின் மலர்கள் கொல்லனின் உலைக்களத்தில் மிதித்தல் பொருந்திய துருத்தியால் ஊதப் பட்ட உலைத் தீயினின்று எழும் தீப்பொறி போல் சிதறின அவை பல சிறிய மின்மினிப் பூச்சிகள் போல நீலமணி போன்ற நிறம் பொருந்திய பெரிய புதரில் தாவும் இவ் இயல்பு பொருந்திய நாட்டையுடைய எம் பெருமகனே!

நள்ளிரவில் பாம்பின் கோடுகளையுடைய படம் பொருந் திய தலை துண்டாகுமாறு இடியானது முழங்கும் அச்சம் தோன்றுதற்குக் காரணமான பரந்த இடத்தில், சோம்பல் இல்லாத உள்ளத்துடன் நின் கையில் வேலே துணையாய்க் கொண்டு செறிந்த இருளையுடைய சிறு வழியில் சிறிதும் ஆராய்ச்சி இல்லாது இவ்வாறு இரவுக் குறியில் வருகின்றனை இத்தகைய நின்னிடம் எண்ணத்தைச் செலுத்திப் பொறுத்துக் கொள்ள இயலாததும் கடப்பதற்கு அரியதுமான துன்பக் கடலை நீந்தியபடி இருப்பவர் நாங்கள் மட்டுமே என்று எண்ணுகின்றோம் எங்களை அன்றி வேறு எவரேனும் உள்ளாரோ! இருந்தால் கூறுக. என்றாள் தோழி

419. வாழ்க தலைவி

யாம இரவின் நெடுங் கடை நின்று
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்