பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


குதிரைகளைக் கொண்ட அத் தலைவன் இழும் என்ற ஒசையை உடைய அச் சோலையில் மணலில் சிறிது நேரம் தங்கியிருந்து, இங்கு வந்து மயக்கம் தரும் மாலைப் பொழுது வரை தங்கியதும் இல்லை. அவனைச் சுழல்கின்ற கண்களைப் பெற்ற உன் மகள் பார்க்கவுமில்லை. அங்ங்னமாகவும், அலை யில் விளையாடி வருந்தியதால் தளர்ந்த வரிசையான வளை யலையுற்ற மகளிர் கூட்டத்துடன் நின் மகள் உப்பு மேட்டின் மீது ஏறி நின்று, இருள்வர, கரைக்கு மீண்டு வரும் படகுகளை எண்ணும் துறையை உற்ற அத் தலைவன், அவன். அத் தலை வனுடன் நின் மகளைச் சார்த்தி இந்த ஊரானது ஒப்பில்லாத தன் கொடுமையால் அலர் தூற்றுகின்றது, என்று தோழி செவிலித் தாயிடம் செப்பினாள்.

289. யாது நும் கருத்து? நிலாவின் இலங்க மணல் மலி மறுகில், புலால்அம் சேரிப், புல் வேய் குரம்பை, ஊர்என உணராச் சிறுமையொடு, நீர்உடுத்து, இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம் ஒருநாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள் தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி வந்தனை சென்மோ - வளை மேய் பரப்பiபொம்மற் படு திரை கம்மென உடைதரும் மரன்.ஒங்கு ஒரு சிறை பல பாராட்டி, எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற, நல்தேர் பூட்டலும் உரியீர், அற்றன்று, சேந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும் எம் வரை அளவையின் பெட்குவம்; நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.

- உலோச்சனார் அக 200 சங்குகள் மேயும் இயல்பு கொண்ட கடற்பரப்பை உடைய வனே! நிலவு ஒளியைப் போல் விளங்கும் மணல் தெருவில் உள்ள புல்லால் வேயப் பெற்ற குடிசைகள் புலால் நாற்றும் வீசும் சேரி எம் ஊர் இஃது ஒர் ஊர் என்று உணர இயலாத சிறுமையுடையது. நீர் சூழப் பெற்றுத் துன்பம் உடையதாய்