பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

191


உள்ளது அங்ங்னமாயினும் இன்பம் அளிக்கும் தன்மை யினால் ஒருநாள் இங்குத் தங்கியிருந்தவர்க்கும் மறுநாள் தம் ஊரையே மறந்திடச் செய்யும் இத் தன்மை கொண்டமை யால் எம் ஊர்க்கு வந்து செல்வாயாக பொலிவுடைய ஒலிக் கும் அலை விரைவாகச் சிதறிடும் மரங்கள் உயர்ந்துள்ள ஒரு சோலையிடத்தே உன் பண்புகள் பலவற்றையும் பாராட்டும் படி இன்று பகல் எம்முடன் இருந்து தங்குவீராக தங்கி இரவு வரும் போது நும் தேரைப் பூட்டி உம் ஊர்க்குச் செல்லவும் உரியவராவீர் அவ்வாறு இல்லாமல் இரவுப் பொழுதிலும் எங்கள் ஊரிலேயே தங்கிச் செல்வதற்கு உடன் படுவீராயின் நாங்களும் எங்களால் முடிந்த அளவு உம்மைப் பேணுவோம் இஃது உம் கருத்துக்கு ஏற்றதா? ஏற்றதாயின் எமக்கு அதனைக் கூறுவீராக என்று தலைமகள் குறிப்பு அறிந்து தோழி தலைவனிடம் சொன்னாள்

290. அரிதாயிற்று தலைவன் வருகை

குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர் எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன் புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட, விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த் திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து, நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன், பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி, தான்் இவண் வந்த காலை, நம் ஊர்க் கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி, ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன் சாயல் மார்பின் பாயல் மாற்றி, 'கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச் செலவு அரிது என்னும் என்பது பல கேட்டணமால் - தோழி! - நாமே.

- உலோச்சனார் அக 210 தோழியே சிறிய இறப்பையுடைய குடிசை அதில் வாழும் கொலைத் தொழிலையுட்ைய பரதவர் அவரால் எறியப்பட்ட உளி தாக்கிய பெருமீன் வானை அணி செய்யும்