பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

19


“தலைவனே! நினக்கு உறவாயினவளை யாம் பார்த்தோம். அவள் உண்ணும் செயல் அற்ற மரப்பாவைக்குத் தன் நன்கு வெளிப்படாத வறிய கொங்கையை வைத்துப் பாலூட்டி விளையாடுபவள் ஆவாள்!” என்றாள் பரத்தை,

பாடல்கள் 129, 130 மூலம் கிடைக்கவில்லை.

பாற்ைகு-உரைத்தது 29. கொண்கன் நட்பு சிறந்தது!

நன்றே, பாண கொண்கனது நட்பே -

தில்லை வேலி இவ் ஊர்க்

கல்லென் கெளவை எழாஅக் காலே. - ஐங் 131

தலைவி, "பாணனே, தில்லை மரங்களால் ஆன வேலி சூழ்ந்த இவ் ஊரில் 'கல்’ என்னும்படி அலர் எழுந்து பரவா தாயின் தலைவனின் நட்புப் பெரிதும் நன்றே ஆகும்” என்று உரைத்தாள்.

30. அலர் எழுந்தது! அம்ம வாழி, பாண - புன்னை அரும்பு மலி கானல் இவ் ஊர் அலர் ஆகின்று அவர் அருளுமாறே. - ஐங் 132 தலைவி பாணனை நோக்கி, “பான, கேள் புன்னையின் அரும்புகள் மிக்குள்ள சோலையையுடைய இவ் ஊரில் அவர் அருள் செய்யும் திறம் அலராகி நின்றது. அங்ங்னமாக அவர் அருளுடையராதல் எவ்வாறு பொருந்தும்?” என வினவினாள்.

31. தோள்கள் மெலிந்தன யான் எவன் செய்கோ? பாண - ஆனாது மெல்லம் புலம்பன் பிரிந்தெனப், புல்லென்றன, என் புரிவளைத் தோளே! - ஐங் 133 தலைவி பாணனை நோக்கி, “பாணனே, மென்மையான நிலத்தையுடைய தலைவன் மனைப் புறத்தே சிறிது பிரிந்தான்்.