பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


விலை ஒப்பாகும். வாங்கிக் கொள்வீராக!” என்று சேரி தோறும் விற்கும் அழகிய கொப்பூழையும் மூங்கில் போன்ற தோளையும் உடையாய்! உன் உடலில் உள்ள இன்பத்துக் குரிய விலையை அறியோமே என யாம் சொல்லிச் சிறிது தடைப்படுத்தினோம்

தன் பெரிய கண்ணால் மாறுபட்டவள் போலப் பார்த்து எம்மைத் தடுக்கும் நீவிர் யாரோ எனச் சொல்லி இள நகை யுடையவளாய்ப் பெயர்ந்து நின்ற சில வெள்ளிய வளை களால் பொலிந்த பல மாண்புடைய பேதையின் பொருட்டு என் நெஞ்சம் வன்மை இழந்துவிட்டது, என்று தலைவன் தன் தோழனிடம் சொன்னான்

309. இவ்வூர் நகைப்புக்கு ஆனது நகை நன்று அம்ம தான்ே - அவனொடு மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து, கானல் அல்கிய நம் களவு அகல, பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை, நூல் அமை பிறப்பின், நீல உத்தி, கொய்ம்மயிர் எருத்தம் பினர் படப் பெருகி, நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந் தினைக் குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு வீங்கு கவல் மொசியத் தாங்கு நுகம் தழிஇ, பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி, மதியுடைய வலவன் ஏவலின், இகு துறைப் புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க் கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி, பால் கண்டன்ன ஊதை வெண் மணல், கால் கண்டன்ன வழி படப் போகி, அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து, ஆங்கண், இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை, பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு, நேமி தந்த நெடுநீர் நெய்தல்