பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

247


சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்ந்த நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப் பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ, கேள்: ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல், ப்ோற்றுதல் என்பது புணர்ந்தாரைப்பிரியாமை, பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல், 'அன்பு எனப்படுவது தன் கிளை செறாமை, 'அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோன்றல், செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை, 'நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை, 'முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல், 'பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல், ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க! தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்; நின்தலை வருந்தியாள் துயரம் சென்றனை களைமோ பூண்க, நின் தேரே. - கலி 133 கரிய மலர்கள் நிறைந்த கழி முள்ளியும் தில்லை மரமும் செறிந்து வளர்ந்திருக்கும் கடற்கரைச் சோலையில், அலை யால் சேர்க்கப்பட்ட மணல் மேல் காற்றால் உயர்ந்த மணலில் உடனின்று புகழ் மிகும் தலைமையுடைய தென்முகக் கடவு ளான இறைவர் தாம் இருக்கும் இடத்துக்கு முன்பு தூக்கி வைத்த நீர் நிறைந்த குண்டிகை போல், பழம் தொங்கும் முடமான தாழைப்பூ மலர்ந்தது போல் குருகினம் அத் தாழை மேல் தங்கும் துறைவனே! நான் சொல்வதைக் கேள்!

இல்வாழ்வு நடத்துதல் என்பது வறியவர்க்கு ஏதேனும் ஒன்றை உதவுதலாகும். भ्र

ஒன்றைப் பாதுகாத்தல் எனச் சொல்லப்படுவது நட்புடை யவரைப் பிரியாதிருத்தலாகும்

மக்கள் பண்பு எனக் கூறப்படுவது உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதலேயாகும்

அன்பு என்று சொல்லப்படுவது தன் சுற்றம் கெடாது இருக்கச் செய்தலேயாகும்.