பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


சான்றிரே, வாழ்க குற்றமுடைய சொற்களைச் சொல்லாத படி தெள்ளிய நாவினால் சொல்லைச் சொல்ல வல்லார் முன், சொல்லுதல் வல்லவனாகிய என்னைப் பிறர் முன் ஒன்றையும் கல்லாத தன்மையனாகக் காட்டியவள், இரவுக் காலத்தில் இடியை உமிழும் முகிலின் இருளைப் பிளக்கும் மின்னலை வாங்கிக் கொள்வேன் என்று எண்ணிய ஒருவன் தன்மையளாய் விளங்குகிறாள்” எனக் கூறி அவ் ஊர்த் தெருவில் கண்டவர் வருத்த மடல் மாவை ஏறிப் பாடிட, திருந்திய அணியையுடைய வளைத் தன் பெறுதற்குரிய சொற் களைச் சொல்லைக் கேட்டனர். பகைவர் போர்த் தொழிலில் வல்ல பாண்டிய மன்னனுக்கு அஞ்சி அரிய திறை கொடுக்கு மாறு போல், தம் குடிக்குப் பழுதாம் என்று அஞ்சி, அவளை அங்கேயே தந்தனர். இந்த மகட் கொடை இருந்தவாறு என்னே! எனக் கண்டார் வியந்து சொன்னார்.

333. மார்பனைச் சார்ந்து நலம் பெற்றாள் புரிவுண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை, அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார்கண் செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது, நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும் பயன் இன்று மன்றம்ம, காம இவள் மன்னும் ஒள் நுதல் ஆயத்தார் ஒராங்குத் திளைப்பினும், முள்துனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி, தன் கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண் இன்றி யாவரும் தண் குரல் கேட்ப, நிரை வெண் பல் மீ உயர் தோன்ற, நகாஅ நக்காங்கே, பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண்கண் ஆய் இதழ் மல்க அழும். ஒஒ! அழிதகப் பாராதே, அல்லல் குறுகினம் காண்பாம் கனங்குழை பண்பு. என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை நகுதிரோ? நல்ல நகாஅலிர் மற்கொலோ - யான் உற்ற அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு புல்லிப் புணரப் பெறின்.