பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

281


அமையில்லாதவன் யாம் விளையாடும் கோரைப் புல் பாவையைவும் மலர்களையும் கொணர்த்து நமக்குக் காட்டி யான் தன் பின்னே செல்லும்படி அவற்றைக் கொண்டோடிய உவ் இடத்தைக் காணாய்

எனக்கு அவன் தொய்யில் எழுதினான் அத்தகைய இடத்தைப் பாராய்

மனத்தில் அறமற்ற அவன், தையலே, நின்னைப் பிரியேன்” என்று என்னைத் தெளிவித்தான்் பின்பு மெல்ல முயங்கினான். முயங்கிய உவ் இடத்தைப் பாராய்!

அங்ங்னம் சொன்ன அளவில் அந்த முயல் கரிய முகிலுக் குள் மறைந்து போனது ஆதலால் அதைக் கைவிட்டு இடையே தன்மீது வந்த காற்றை விளித்தாள் “காற்றான தெய்வமே திங்களின் ஒளி போலன்றி வானத்திலும் உலகத் திலும் பரவும் பல செங்கதிர்களை உடைய ஞாயிற்றின் ஒளியுள்ள இடம் எங்கும் போய்த் தேடுதற்குரிய உயவுத் தேரை ஊர்ந்து வந்து, தன்னால் அருளத்தக்க என் உள்ளத்தில் கெடாத காம நோயைச் செய்து என்னைக் கைவிட்டுச் சென்ற அன்பு அற்றவனை அந்த நோய் நீங்கி மனம் தெளிவு கொள்ளும்படி எதிர்ப்படுவாய் அவ்வாறு செய்து வேட்கை மிகுதியான் எம்முடைய இயற்கை நலத்தை உண்டவன் பின்பு ஒரு காரணமும் இல்லாது போனவனைக் காட்டுவாய் அங்ங்னம் நீ காட்டாயாயின் எழும் தீயால் நின் மேனியை எல்லாம் சுடுவேன் என்று மொழிந்தாள்

அவ்வாறு கூறி அதைப் பின்பு காணாததால், தான்் அதைக் தேட எண்ணிக் கடலை நோக்கி"கடல் தெய்வமே! என்னைப் பாதுகாவாமல் துறந்தவனை நான் தேடிக் காணும் இடத்தில் விட்டுப் போகாமல் ஏறுவாயாயின் உன் இடம் எங்கும் வெறும் மணலாய் என் புறங்காலால் உன்னுடைய நீரையெல்லாம இறைப்பேன் அது முடியுமோ என்றால் அது முடிதற்கு அறக் கடவுள் எனக்குத் துணையாகவும் கூடும் என்று சொன்னாள்

அவ்வாறு மொழிந்து ஒதம் வடிந்ததைக் கண்டு என்னைத் துறந்து போனவனை நீ தேடிக் கொண்டு வந்து தருவா