பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

? அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்

ஒல்லை எம்காதலர்க் கொண்டு, கடல்ஊர்ந்து காலைநாள் போதரின் காண்குவேன்மன்னோ - பனியோடு மாலைப் பகை தாங்கி, யான்?

இனியன் என்று ஒம்படுப்பல், ஞாயிறு இனி.

ஒள் வளை ஒடத் துறந்து, துயர் செய்த கள்வன்பால் பட்டன்று, ஒளித்து என்னை, உள்ளிபெருங் கடல் புல்லென, கானல் புலம்ப, இருங் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற, விரிந்து இலங்கு வெண்நிலா வீசும் பொழுதினான், யான் வேண்டு ஒருவன், என் அல்லல் உறீஇயான்; தான்் வேண்டுபவரோடு துஞ்சும்கொல், துஞ்சாது? வானும், நிலனும், திசையும், துழாவும் - என் ஆனாப் படர் மிக்க நெஞ்சு. ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி, என் ஆர் உயிர் எஞ்சும்மன்; அங்கு நி சென்றிநிலவு உமிழ் வான் திங்காள் ஆய் தொடி கொட்ப அளி புறம் மாறி, அருளான் துறந்த அக் காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார் எல்லாரும் தேற்றார், மருந்து. வினைக் கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்! எனைத்தான்ும் எள்ளினும், எள்ளலன், கேள்வன்; நினைப்பினும், கண்ணுள்ளே தோன்றும்; அனைத்தற்கே ஏமராது, ஏமரா ஆறு. கனை இருள் வானம்! கடல் முகந்து, என்மேல் உறையொடு நின்றியல் வேண்டும், ஒருங்கே நிறை வளை கொட்பித்தான்் செய்த துயரால் இறை இறை பொத்திற்றுத் தி.

எனப பாடி நோயுடை நெஞ்சத்து எறியா, இனைபு ஏங்கி, 'யாவிரும் எம் கேள்வற் காணிரோ? என்பவட்கு, ஆர்வுற்ற பூசற்கு அறம்போல, ஏய்தந்தார்;