பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

87


செலீஇய சேறிஆயின், இவளே வருவை ஆகிய சில் நாள், வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மேl

- நக்கண்ணையார் நற் 19 “தாழையானது இறால் மீனின் முதுகு போன்ற சருச் சரை பொருந்திய பெரிய அடியையுடையது; சுறா மீனின் கொம்பு போன்ற விளிம்பில் முள்ளைக் கொண்ட இலையை யுடையது; பெரிய ஆண் யானையின் மருப்புப் போன்ற அரும்புகளை உடையது; அந்த அரும்புகள் முதிர்ந்து நல்ல குதிரையின் பிடரி மயிர் போல வேறுபடத் தோன்றி, விழாவின் களம் எங்கும் கமழும். இவ் வளத்தோடு நீர்ப் பெருக்குள்ள சேர்ப்பனே! பல மணிகளையுடைய நெடிய தேரினை, பாகன் செலுத்த உன் ஊர் திரும்பும் நினைப் போடு புறப்படுவாயானால், இவள் நீ திரும்பி வரும் எல்லை யாகிய சில நாள்கள் கூட வாழ மாட்டாள். அதனை நீ நன்றாக அறிந்து கொண்டு செல்வாயாக" என்று கூடிக் குலவிய தலைவனைத் தோழி அறிவுறுத்தினாள்.

173. தாய் என்ன கருதினாளோ? நீயும் யானும், நெருநல், பூவின் நுண் தாது உறைக்கும் வண்டினம் ஒப்பி, ஒழி திரை வளித்த வெண் மணல் அடைகரைக் கழி சூழ் கானல் ஆடியது அன்றிக், கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே - நன்றும் எவன் குறித்தனள்கொல், அன்னை?- கயந்தோறு இற ஆர் இனக் குருகு ஒலிப்பச் சுறவம் கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி, கண்போல் பூத்தமை கண்டு, 'நுண் பல சிறு பாசடைய நெய்தல் குறுமோ, சென்று எனக் கூறாதோளே.

- குடவாயிற் கீரத்தனார் நற் 27 "தோழியே, நீயும் நானும் நேற்று பூவின் துண்ணிய தாதுகளில் வீழும் வண்டுகளை ஒட்டி, ஒய்ந்துபோன