பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று எய்தினை, வாழியூ - நெஞ்சே! - செவ் வரை அருவி ஆன்ற நீர் இல் நீள் இடைக் கயந் தலை ம்டப்பி உயங்கு பசி களைஇயர் பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஒமை அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும் குன்ற வைப்பின் கானம் சென்று சேண் அகறல் வல்லிய நீயே

- பெருங்கண்ணனார் நற் 137 "நெஞ்மே, செம்மையான மலையில் அருவி அமைந்தி ருந்தும் நீரில்லாத நீண்ட வழியில் மெல்லிய தலையுடைய இளம் பிடியின் வருத்தும் பசியைப் பெருங்களிறு நீக்கக் கருதியது களிறு அழித்ததலால் முடமான அடியையுடைய ஒமை மரம் செல்லுதற்கரிய காட்டில் செல்வ்ோர்க்கு தங்கும் நிழலாகும். குன்றத்தின் பகுதியிலுள்ள பாலை நிலத்தில் சென்று அங்கிருந்து நெடுந்துரம் செல்ல நினைக்கும் வலிமை பெற்ற நெஞ்சம் நீ. மெல்லியதாகக் கமழும் தாழ்ந்த கரிய கூந்தலையும், பெரிய் மெல்லிய மூங்கில் போன்ற தோளையும், இளமையுடைய நல்லவனித்திருந்து பிரிந்து ப்ோக நினைத்தா யாயின் இவளைக் காட்டிலும் அரியது. ஒன்ன்ற நீ அடைந் தாய் என்பது விளங்குகியது. நீவாழிய” என்று தலைவன் பிரிவின்றி தன் நெஞ்சிடம் நிகழ்த்தினான்

230. விலகேன் சிறிதும்

இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய், மாரி யானையின் மருங்குல் தீண்டிப், பொரி அரை ளுெமிர்ந்த புழற் காய்க் கொன்றை, நீடிய சடையோடு ஆடா மேனிக் குன்று உறை தவசியர் போல, பலவுடன் என்றுழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும் அருஞ் சுரம் எளியமன், நினக்கே, பருந்து படப் பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த