பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 149

"நெஞ்சே, அருவி ஒலிக்கும் பெரிய மலையின் பக்கத்தில் ஆளி என்னும் நல்ல விலங்கு இரை விரும்பி எழுந்தது கொல்ல வல்ல ந்கத்தையும் அழகிய வரிகளையுமுடைய புலியோடு போரிட்டு அதனைக் கொன்று கூரிய நுனியையும் ஏந்திய வெண்கோட்டை உடைய களிற்றைக் கொன்றது கொன்று போட்ட களிற்றை நெருங்க முடியாத காட்டினுள் இழுத்துச் சென்றது அவ்வாறாய காடு என்று எண்ணாமல் குவளை போன்ற மையுண்ட கண்களையுடைய இவள் இங்குத் தனியாக இருக்க நீ ஆள்வினைக்கு அதன் வழியே அகன்று போவாய், நீ போனால் கொல்லையில் வளைந்த முள்ளையுடைய எங்கையின் நெடிய கரிய அழகிய தளிரின் மீது விரைவையுடைய மழை நீர் மலியப் பெய்த போதுண் டான அழகிய நிறம் போன்ற இவளது மாமை அழகு இன்றோடு போய்விடும்” என்று தலைவன் கடமை உணர் வால் செல்ல எண்ணுதலும், காதல் உணர்வால் தடை செய்தலும் கொண்ட நெஞ்சிற்குக் கூறினான்

250. விரைவில் வரச்செய்யும் முகிலின் முழக்கம்!

விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி, அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப, விளிவு இலகலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து, எவன் நினைபு வாடுதி? - சுடர் நுதற் குறுமகள்! - செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும், நோன்மார் அல்லர் நோயே, மற்று அவர் கொன்னும் நம்புங் குரையிர் தாமே சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்; பிரிந்த நம்மினும் இரங்கி, அரும்பொருள் முடியாது ஆயினும் வருவர்; அதன்தலை, இன் துனைப் பிரிந்தோர் நாடித் தருவது போலும் இப் பெரு மழைக் குரலே?

- நொச்சி நியமங்கிழார் நற் 208 "பிறைபோன்ற நுதலையுடைய இளமடந்தையே, சிறப்பு மிக்கு விளங்கும் அணிகலன்கள் நெகிழவும், நீர்போன்ற தெளிந்த கண்ணிர்த் துளிகள் கொங்கையை நனைப்பவும்