பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 * அன்பொடு புணர்ந்த ஐந்தினை - பாலை

கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு அகறல் ஒம்புமின், அறிவுடையீர் எனக் கையறத் துறப்போர்க் கழறுவ போல, மெய் உற இருந்து மேவர நுவல, இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற் பிரியல் ஆட்வர்க்கு இயல்பு எனின், அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே

- காமக்கானி நப்பசலையார் நற் 243 “தேன் உடையது மலை அதன் பக்கத்தில் தெளிந்த நீர் உண்டு நீர் சூழ்ந்த உருண்டைக் கல் உண்டு அதன் அருகில் துய மணல் அடைந்த கரை உண்டு. அக் கரையில் மா மரங்கள் உண்டு அவை அசையும் கிளைகளை உடையன; நல்ல மா வடுக்கள் நிரம்பியன மாமரச் சோலை தோறும் தங்கியிருக்கும் பூப்போன்ற கண்களையுடையன கரிய குயில் கள். அறிவுடை யீர், வாழ்க்கை, சூதாடு கருவி மாறி மாறி விழுவதுபோல நிலையில்லாதது அதனால் காதலியரை விட்டுப் பிரியாதீர் என்று சொல்லும். அது கையறத் துறப் போரைப் பார்த்துக் கழறுவது போல இருக்கும். குயில்கள் உடனிருந்து பொருத்த மாகச் சொல்லும் இவ்வாறான இன்னாத நேரத்தில், இளவேனிற் காலத்தில் பொருளின் பொருட்டுப் பிரிவது ஆண்களின் இயல்பு என்றால் அறத்தி னும் பொருள் உறுதியாக அரியதே ஆகும்” என்றாள் பிரி விடை மெலிந்த தலைவி

261. அவன் வருகின்ற பருவம் இதுவோ? இடுஉ ஊங்கண் இனிய படுஉம்; நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்; மனை மா நொச்சி மீமிசை மாச் சினை, வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்; உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்திச், செய்பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர், வருவர் வாழி - தோழி - புறவின் பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,