பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 175

நோய் ஆகின்றே - மகளை! நின் தோழி, எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விளி, உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பணள் நோக்கி இலங்கு அலை வெள் வேல் விடலையை விலங்கு மலை ஆர் இடை நலியும் கொல் எனவே.

- கயமனார் நற் 305

“என் மகளே கேளாய் உன் தோழி என் மகள் அவள் காதலனோடு போய் விட்டாள் அவள் விளையாடும் வரி அழகுள்ள பந்தும், வாடிய வயலைக் கொடியும் மயில் அடி போன்ற இலையையும், சிறந்த பூங் கொத்தையும் உடைய நொச்சியும் பாதுகாப்பான அகன்ற இல்லத்தில் காணும்படி தோன்றுகின்றன அவளில்லாது தனியாகக் கண்ட சோலையும் என்னை வருத்துகின்றது ஞாயிறு வெப்பம் அடங்கிய பொழுதில் விளங்கும் அழகிய மரக் கிளையிலிருந்து வரி யுள்ள முதுகையுடைய புறாவின் வருத்தம் கொள்ளத தகுந்த தெளிந்த ஒசைகேட்டு வெப்பம் விளங்கும் பொழுதில் மிளிரும் இலை போன்ற ஒளி பொருந்திய வேலை ஏந்திய இளைஞனைப் பொருந்தப் பார்த்து மலை குறுக்கிடும் வழியில் என் மகள் வருத்தம் கொள்வாளோ என்று எனக்கு வருத்தம் உண்டாகிறது” என்றாள் தலைவியின் தோழியிடம் அவளை ஈன்ற தாய்.

279. பிரிந்து செல்வது எவ்விதம்? செல விரைவுற்ற அரவம் போற்றி, மலர் ஏர் உண்கண் பணி வர, ஆயிழை - யாம் தற் கரையவும், நாணினள் வருவோள், வேண்டாமையின் மென்மெல வந்து, வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி. வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினைப் பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து , ஆகம் அடைதந்தோளே; அது கண்டு, ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்