பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

தான தனது பொதிய மலையில் பகைவரால் வெல்வதற்கு அரிய குறவர் முருகனை வணங்கித் தந்த நறிய சந்தனமாகிய ஆரமும், ஆகிய இந்தப் பெரிய இருவகை ஆரங்களை யும் அழகுற அணிபவன் பாண்டிய மன்னன் அவனுடைய படைத் தலைவனும், குடியினின்று பிடிக்கப்பட்ட, பழகாத காட்டு யானைகளை உரிய மொழிகளால் தொழிலை அறி விக்கும் சிறிது காலமே அல்லாது தனக்கென வரைந்து வைத்துக் கொள்ளும் தன்மையில்லாது இரவலர்க்கு ஈந்து விடும் வள்ளன்மை கொண்ட கூர்மை வாய்ந்த அம்பை யுடைய கோட்டுர்க்குத் தலைவன் பண்ணி என்பவன் அவன் போர்க் களத்தில் செய்த களவேள்வியைப் போல நீவிர் தேடி வரும் பொருளால் சிறந்த பயன் விளைவதானாலும், முகில்கள் தெற்கே எழுந்து போய் மிகுந்த மழையைப் பெய்யும் கூதிர்ப் பருவத்தை உலகம் கொள்ளுகின்ற காலம் பிரிந்து வாழ இயலாத காலம் அக் காலத்தில் உனக்கு இனிய துணை யான மென்மை வாய்ந்த இவளைப் பிரிந்து போய் வேற்று நாட்டில் தங்குவீரானால், வளம் மிகுந்த வயலில், தீக் கொழுந்தைப் போன்ற தோடுகளை ஈன்ற, வயல் நெல்லின் பலவாய்க் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர்கள் நிரம்பிய வயலிடத்து வரப்புகளை அணையாகக் கொண்டு கிடந்து அலையத் தனிமைத் துன்பத்தைக் கொண்டு வரும் பனிக்கால வாடைக் காற்று விளங்கும் பூக்களையுடைய கரும்பின் ஓங்கிய தண்டின் மீதிருந்த வெண் நாரை ஒலிக்கும் படி வீசும் துட்டமான பலவான துளிகளைக் கொண்ட குளிர்ந்த காலத்தில், பொருள் ஈட்டும் பொருட்டாக நீ அயல் நாட்டில் தங்கின், எம் தலைவி வெள்ளாடை விரிக்கப் பட்ட படுக்கையில் தழுவும் இன்பம் அடையாமல் அப் பனிக்காலம் கழியினும் கழிக அது பற்றி நான் கவலவில்லை நீ தேடுகின்ற பொருளுக்கு எக் குறையும் வராமல் இருக்க வேண்டுமே, அதுபற்றியே கவலை கொள்கின்றேன்.

304. சென்ற ஊர் நன் மக்களை உடையதாகுக!

எம் வெங் காமம் இயைவது ஆயின், மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்