பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 19

       24. தலைமகளைக் கண்டு அமைந்தேன்
  எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீளிடைச் 
  சிறிது கண்படுப்பினும், காண்குவென் மன்ற - 
  நள்ளென் கங்குல், நளி மனை நெடு நகர்
  வேங்கை வென்ற சுணங்கின் 
  தேம் பாய் கூந்தல் மாஅயோளே! - ஜங் 324 
  தலைவன் தோழியை நோக்கி, “காட்டுத் தீ தோன்றிப் 

பகலே அல்லாது இரவிலும் எரித்துச் செல்ல, பகலில் வெயில் மிக்கு வருத்தும் நீண்ட சுரத்தில், யான் சற்றுக் கண்ணயர் வேன் ஆனாலும், அக் கண்ணயரும் சிறு பொழுதில், நள் என்ற ஒசையுடைய இரவுப் போதில், பெரிய மனையில் நின்ற நெடிய இல்லத்தில் நிறத்தால் வேங்கை மலர்போல் வீறு பெற்ற தேமல்களையும், தேன் சிந்தும் கூந்தலையும் மாமை நிறத்தையும் உடைய தலைமகளைத் தெளிவாகக் கண்டு அமைந்திருந்தேன். ஆதலால் இவள் குணத்தை நான் மறக்கும் படி இல்லை” என்றான்.

        25. காதலியால் வெம்மை இல்லை வ
  வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇப், 
  போகில் புகா உண்ணாது, பிறிது புலம் படரும் 
  வெம்புஅலை அருஞ் சுரம் நலியாது-
  எம் வெங் காதலி பண்பு:துணைப் பெற்றே. - ஐங் 325 
  தலைவன் தோழியை நோக்கி, "வேனிற் காலத்தில்

உண்டான சூறைக் காற்றால் அலைப்புண்ட அரச மரத்தின் இலைகள் அசைவதால் ஏற்பட்ட ஒசையை அஞ்சிப் பறவை கள் தாம் இரைதேடி உண்பதைச் செய்யாமல் வேற்று நிலங்களை எண்ணிச் செல்லும் வெம்மை மிக்க அரிய சுரம், எங்களால் விரும்பப்பட்ட காதலியின் குணங்களைத் துணை யாகப் பெற்று யாம் சென்றோம் ஆகலின் எம்மை வெம்மை வருத்தவில்லை” என்று கூறினான்.

            26. என்னவள் பண்பு இனிது
     அழல் அவிர் நனந் தலை நிழலிடம் பெறாது, 
     மட மான் அம் பிணை மறியொடு திரங்க,