பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

கரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார், கெளவை மேவலர் ஆகி, இவ் ஊர் நிரையப் பெண்டிர் இன்னா கூறும் புரையஅல்ல, என் மகட்கு எனப் பரைஇ நம் உணர்ந்து ஆறிய கொள்கை அன்னை முன்னர், யாம் என், இதற் படலே?

- ஒரோடோகத்துக் கந்தரத்தனார் அக 95 'தோழியே வாழி என் நெற்றியும் மெல்லப் பசந்தது; தளிர் போன்ற என் மேனியும் மெலிந்து தேய்வதாயிற்று ஊரில் உள்ளவர் பலரும் அறியுமாறு விளங்கும் என் துன்ப மும் என் உயிரைக் கொண்டு போவதே அல்லாது வேறு என்ன செய்யும்?

பொரிந்த அடியையும் முருடுகளையுடைய அரையினை யும் உடைய இருப்பை மரத்தினை குவிந்த குலையினின்றும் உதிர்ந்த பனிக்கட்டிகளைப் போன்ற உள் துளையுடைய திரண்ட மலர்களை, வழியில் தடைப்பட்டுத் தங்குமாறு, குட்டிகளை ஈன்ற கரடிகளின் கூட்டம் கவர்ந்து உண்ணும் இத்தகைய பல சுரங்களையும் கடந்து சென்ற நம் தலைவர் பொருட்டுத் தலைவியர் இரங்குதல் இயல்பே என எண்ணாத வராய், அலர் தூற்றுவதையே விரும்பியவராய் இந்த ஊரில் உள்ள பெண்டிர் கூறும் கொடிய சொற்கள் என் மகளுக்குப் பொருந்துவன அல்ல எனத் தெய்வத்தை வழிபட்டு நம் களவொழுக்கத்தை உணர்ந்து அமைதி அடைந்துள்ள கொள்கையை உடைய நம் அன்னை, முன் நாம் காணப் படின் அவள் நிலை என்னவாகும்? எனவே நான் நம் அன்னை முன் செல்ல அஞ்சியே தலைவனுடன் உடன்போக இசைந்தேன்' என்றாள் தலைவி

345. அழாமல் இருப்பது எப்படி? 'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்