பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

வாடைக் காலம் எப்பொழுது வருகிறது என்று கூறுவாயாக அப் பொழுது காதலரும் வருவார். அதனால் அதனை நீ எமக்குச் சொல்வாயாக குற்றமற்ற தெருவினிடத்தே நாயில் லாத அகன்ற வாயிலில் செந்நெல் சோற்று உருண்டை, மிக வெள்ளிய நெய்யுமாகிய ஒரு வீட்டில் இடும் பிச்சையைப் பெற்று வயிறு நிரம்ப உண்டு இந்த முன்பனிக் காலத்தில் விரும்பத்தக்க வெப்ப நீரை, நீரைச் சேமித்து வைக்கும் செப்பில் பெறுவாயாக!” என்று தலைவன் வரும் காலம் அறிந்தவரை தோழி வினவினாள்.

167. எம்மை நினையாத கொடியரானார்

உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து முறி கண்டன்ன மெல்லென் சீறடிச் சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார் கொடியர் வாழி - தோழி, - கடுவன் ஊழறு தீம் தனிஉதிர்ப்ப, தீழ் இருந்து ஒாபபன ஒாபபன உணனும பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.

- பேரிசாத்தன் குறு 278 "தோழியே! ஆண் குரங்கு முதிர்ந்த இனிய பழங்களை மரத்தின் மேலிருந்து உதிர்க்க அம் மரத்தின் கீழ்ே இருந்து ஏற்பனவற்றைத் தின்னுகின்ற குட்டிகளை உடைய பெண் குரங்குகள் உள்ள மலையைக் கடந்து சென்ற தலைவர், மிக்க காற்று கோதிய அழகிய தளிரை உடைய மா மரத்தினது தளிரைக் கண்டாற் போன்ற மென்மையான சிறிய அடிகளைக் கொண்ட சிறிதான பசிய தாது முதலியவற்றால் செய்த விளையாட்டுப் பாவையையும் எம்மையும் நினையார் அவர், கொடுமையை உடையார்,” என்று தலைவி தோழியிடம் கூறினார்.

168. கடந்தாரோ பாலை நிலத்தை

வெண் மணல் பொதுளிய பைங் கால் கருக்கின் கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு அத்த வேம்பின் அமலை வான் பூச்