பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

170. பாலை நிலத்தார் கொடுமை 'உள்ளது சிதைப்போர், உளர் எனப்படாஅர்; இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு எனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் சென்றனர் வாழி - தோழி, - என்றும் கூற்றத்துஅன்ன கொலை வேல் மறவர் ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த படு முடைப் பருந்து பார்த்திருக்கும் நெடு மூதிடைய நீர் இல் ஆறே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ குறு 283 தோழியே! தம்முடைய முன்னோரால் தேடி வைக்கப் பெற்றுத் தம்பால் உளதாகிய செல்வத்தைச் செலவழிப்போன் செல்வர் என்று உலகத்தாரால் சொல்லப்படான். தாமாக ஈட்டிய பொருள் இல்லாதார் முந்தையோர் பொருளின் பயனைத் துய்த்து வாழுதல் இரத்தலைக் காட்டிலும் இழி வுடையது என்று சொன்ன ஆண்மையை யாம் தெளியும் படி எடுத்துக் கூறி, எப்பொழுது கூற்றுவனைப் போன்ற கொலைத் தொழிலைச் செய்யும் வேலையுடைய மறவர் என்ற இனத்தவர் வழியிடத்தே தங்கி வழிப் போவாரைக் கொன்றதனால் உண்டான புலாலைப் பருந்துகள் எதிர்நோக்கித் தங்கியிருக் கின்ற நெடிய பழைய இடத்தை உடையனவாகிய நீரில்லாத பாலை நிலத்து வழிகளிலே தலைவர் சென்றனர் அவர் வாழ்வாராக" என்று தலைவி தோழியிடம் உரைத்தாள்.

171. கூறிச் சென்ற பருவம் வைகா வைகல் வைகவும் வாரார்; எல்லா எல்லை எல்லையும் தோன்றார்; யாண்டு உளர்கொல்லோ? தோழி ஈண்டு இவர் சொல்லிய பருவமோ இதுவே பல் ஊழ் புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு இமைக்கண் ஏது ஆகின்றோ- ஞெமைத் தலை ஊன் நசைஇ ஒரு பருந்து உகக்கும் வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

- பூதத் தேவன் குறு 285