பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

மடமாத் தோகைக் குடுமியின் தோன்றும் கான நீள் இடை, தானும் நம்மொடு ஒன்று மணம் செய்தனள் இவள் எனின், நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவே.

- காவிரிப்பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன் குறு 347 “நெஞ்சே! முன்பு நீர் மல்கிய சுனை, பின்பு வற்றுதலி னால் வறுமையுற்ற பாலை நிலத்தில் வளர்ந்த இளமையை உடைய வாகை மரத்தின் கொம்பின்கண் உள்ள நறிய மலர் மடப்பத்தை உடைய கரிய மயிலினது உச்சிக் கொண்டை யைப் போலத் தோன்றுகின்ற நீண்ட காட்டு வழியில் இத் தலைவி தானும் நம்மோடு வந்து பொருந்தும் முயக்கத்தைச் செய்வாளெனின் பொருள் செய்தற்கு விரும்பிய நினது துணிவு நன்மை உடையதே ஆகும்" என்றான் தலைவன்.

177. காணமாட்டாரோ அவர்! தாமே செல்பஆயின், கானத்துப் புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த சிறு வீ முல்லைக் கொம்பின், தாஅய், இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர்எழில் பூண் அக வன முலை நனைத்தலும் காணார்கொல்லோ - மாணிழை - நமரே

- மாவளத்தன் குறு 348 “மாட்சிமைப்பட்ட அணிகலன்களை அணிந்தவளே, நம் தலைவர் நம்மைவிட்டு தாம் மட்டும் பிரித்து செல்வாராயின் காட்டினிடத்து மேய்ச்சல் நிலத்தைத் தேடிச் செல்லும் யானையினது கொம்பினிடத்தே, முறிந்து தங்கிய சிறிய பூக்களை உடைய முல்லைக் கொடியின் கொம்பைப் போல இமையைக் கடந்து ஊறுகின்ற கண்ணிர்த் துளியானது பரவி மதர்த்த அழகுடைய அணிகலன்களைத் தன்னிடத்தே கொண்ட நின் முலைகளை நனைத்தலையும் காணாரோ?” என்று தோழி தலைவியிடம் கூறினாள்

178. தடுத்திருப்பின் செல்லார்

அம்ம வாழி - தோழி, - முன் நின்று, பனிக் கடுக்குரையம் செல்லாதீம் எனச்