பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

113


களிறுடை அருஞ் சமம் ததைய நூறும் ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க; சென்றி, பெரும நிற் தகைக்குநர் யாரோ?

- அள்ளுர் நன்முல்லையார் அக 46 “சேற்றில் நிற்கும் நிலையை வெறுத்த சிவந்த கண்களை உடைய எருமை, ஊரவர் எல்லாம் உறங்கும் நள்ளிரவில் வலிய கயிற்றை அறுத்துக் கொண்டு புறப்பட்டுப் போய்க் கூர்மையான முள்ளையுடைய வேலியைத் தன் கொம்பால் அகற்றி விட்டு, நீர் மிகுந்த வயலில் மீன்கள் எல்லாம் ஒட இறங்கி, அங்குள்ள வள்ளைக் கொடிகளை நிலைகுலையச் செய்து வண்டுகள் உள்ளிருந்து ஊதும் தாமரையின் குளிர்ந்த மலரைத் தின்னும் ஊரை உடையவனே!

உன்னுடன் ஊடல் கொள்வதற்கு நீ எத்தகைய உறவுடை யாய்? அயலவனான உன்னை யாங்கள் ஊட மாட்டோம். ஐயனே, யாங்கள் வாளாவிருக்கவும் இவ் ஊரில் உள்ள அயலவர் யாம் விரும்பாத செய்தியைக் கூறுவர். நீண்டு மழைக்காலின் அழகையும் கடந்து திகழும் கரிய கூந்தலை யுடைய பரத்தை ஒருத்தியை மணம் செய்து கொண்டாய் என்பர். அத்தகைய பழியை யாம் கூறோம். நீ வாழ்க, என்று வாழ்த்தவும் செய்கின்றோம்.

பெரும! பகைவரின் யானைகளைக் கொண்ட அரிய போரினைச் சிதைந்திடக் கொல்லும் ஒளிரும் வாட்படையை உடைய வெற்றி பொருந்திய செழியனின் நெற்குவியலை யுடைய அள்ளுர் போன்ற எனது ஒள்ளிய வளையல் நெகிழ்ந்து வீழினும் வீழ்க. நீ நின் பரத்தையிடம் செல்க, உன்னைத் தடுப்பவர் யார் உள்ளார்? கும்பிட்டு நின்ற பாணனின் காட்சி எனக்கு நகையை உண்டாக்குகின்றது” என்று வாயில் வேண்டிச் சென்ற தலைவனிடம் தோழி மறுத்துக் கூறினாள்.

188. நகை ஆகின்றே - தோழி! மணி கண்டன்ன துணி கயம் துளங்க, இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை