பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப கமழ் கோதை கோலாப் புடைத்து தன் மார்பில் இழையினைக் கை யாத்து இறுகிறுக்கி வாங்கிப் பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான் தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின். பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளைப் பொய்ச் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து மெய்ச் சூள் உறுவானை மெல்இயல் பொய்ச் சூள் என்று ஒல்லுவ சொல்லாது உரை வழுவச் சொல்ல உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப் புல்லாத ஊடிப் புலந்து நின்றவள் பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண் பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர, நில்லாது நீங்கி நிலம் சோர, அல்லாந்து மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து, எல்லாத் துணியும் இறப்பத் தன் காதலன் நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் வல்லதால் வைவைப் புனல்.

என ஆங்கு மல்லிகை மெளவல் மணம் கமழ் சண்பகம் அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி நல் இணர் நாகம், நறவம் சுரபுன்னை எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழத் தேறித் தெளிந்து, செறி இருள் மால் மலை பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று

துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்

கார் அடு காலை கலிழ் செங் குருதித்தே போர் அடு தானையான் யாறு.

சுடுநீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி