பக்கம்:அபிதான சிந்தாமணி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

முள்ள விஷயங்களையும், உலக வழக்குகளையும், அவற்றினுட் கருத்துக்களையும் தழுவியதாகும். இதலடங்கியவை: வேதப் பொருள் விளக்கம், பல மஹா புராணக் கதைகள், ஸ்தல புராணக் கதைகள், பாரதாதி இதிஹாசங்கள், ஸ்மிருதி விஷயங்கள், பலநாட்டுச் சமைய நிச்சயங்கள், பல ஜாதி விஷயங்கள், பரதம், இரத்தினோற்பத்தி, வைத்யம், சோதிடம், விரதம், நிமித்தம், தானம், கனாநிலை, பல சமய அடியராழ்வார்களின் சரிதைகள், பல வித்வான்களின் சரிதைகள், சிவாலய விஷ்ணுவாலய மான்மியங்கள், சூர்ய சந்திர ராக்ஷச இருமடிகளின், பரம்பரைகள், சைவ, வைஷ்ணவ மாத்வ ஸ்மார்த்த சமய வரலாறுகள், சைவாதீன பண்டார சந்நதிகளின் மட வரலாறுகள், இந்துதேசம் ஆண்ட புராதன அரசர் வரலாறுகள் முதலிய அரிய விஷயங்களாம்.

இது ஒரு தத்வ கலாரத்னாகரமாய் மந்திர சாஸ்திரமாயுள்ள அரிய விஷயங்கள் நீங்க மற்றவைகளின் சாரசங்கிரகமாகும். இதனை எழுதப்புகுங்கால் சிலர் வாயிலாகக் கேட்டதை அப்போதைக்கப்போது மறப்பெனுங் கள்வ னவற்றை வஞ்சியாது என் கைப்புத்தகத்தில் முதலில் குறித்துக் கொண்டு, பின்னர்க் கதையெழுதும் புத்தகத்தில் பதிந்து, அவற்றைச் சின்னாள் பொறுத்து அகராதி முறைப்படுத்தி, மீண்டும் பெயர்த்து எழுதினேன். இதற்குள் என் அன்பர் கோபலராயர் காலமாயினர்.

இந்நூல் இற்றைக்கு (131) பாரங்களுக்கு மேல் இராயல் எட்டுப் பக்கங்கள் கொண்ட உருவத்தில் சற்றேறக்குறைய லெட் இல்லாமல் (1050) பக்கங்கள் கொண்ட ஸ்மால் பைகாவில் முடிந்தது. இதனை நோக்கு மறிவாளர் இதனை நான் ஒரு முறை தனித்தனிக் கதையினுருக்கொண்டு எழுதிப் பின்னொரு முறை அகராதி முறைப்படப் பெயர்த்தெழுதிப் பின்னதனைச் சுத்தப் பிரதியாக்கிய பிரயாசையை யறியாதிரார்.

இந்நூல் இவ்வாறு ஒருவாறு முற்றுப் பெற்றபின் இதனை சென்னையிலிருந்த பிரபுக்கள் சிலரிடம் காட்டினேன். ‘அவர்கள் இத்தகைய நூல் தமிழிற் கின்றியமையாததே; அதனை வெளியிடுக’ என்றனரேயன்றி யதனை யச்சிட்டு வெளிப்படுத்த ஒன்றும் கூறிற்றிலர்.

பின்பு யாழ்பாணம் ம-௱-௱-ஸ்ரீ கனகசபைப் பிள்ளை பி.ஏ., பி.எல். அவர்களிடம் இதின் ஒரு பாகத்தை காட்டினேன். அவர் இஃது அரிய தமிழ்க்கதை அகராதி; இதனைச் சென்னையிலுள்ளார் ஆதரிக்க வேண்டுமென ஒரு பத்திரம் எழுதித் தந்தனர். புரொபஸராயிருந்த சேஷகிரி சாஸ்திரியார் அவர்களிடம் காட்டினேன். அவர் இதனையொப்ப நானும் ஒரு நூல் எழுதிக் கொண்டு வருகிறேன் என்று கூறினரே அன்றி வேறொன்றுங் கூறவில்லை. அவர் கருத்தென்னோ அறியேன். அதற்க்குப் பின்னிதனைச் சென்னை கியூரேடரும் பச்சையப்பன் கல்விச்சாலைத் தரும விசாரணையின் எடிகேஷனல் டிரஸ்டியுமாகிய பிரம்மஸ்ரீ வ. கிருஷ்ணமாச்சாரியாரிடம் காட்டினேன். அவர் பல அச்சாபிசுக்காரர்களிடம் காட்டி செலவு அதிகம் பிடிக்கும் எனக்கூறி விடுத்தனர். நான் கூடிய அளவில் உயர்தரக் கல்வி போதிக்கவல்லேனாயினும் ஊழ்வலியால் சென்னை பச்சையப்பன் விசாரணைக்குட்பட்ட பி. டீ. செங்கல்வராய நாயகர், கோவிந்த நாயகர், கலாசாலைகளில் அமர்ந்து செல்வாக்கிலாததால் வருவாய் மட்டாக அச்சிடப் பொருளிலாது இதனை சஞ்சிகை வாயிலாக வெளியிட ஒரு அறிக்கை பத்திரம் வெளியிட்டேன். இதன் பொருட்டு பலரிடம் கையொப்பம்