பக்கம்:அபிதா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 103


வென்னீரின் ஆவி கலைகையில், புலனுக்குப் பிதுங்குவது, பளிங்கிலடித்தாற் போன்று, நெருக்கமாய் நின்ற இரு பாதங்கள். அங்கிருந்து முழங்காலை நோக்கி விழியேறுகையில், பிடிப்பான கண்ட சதையின் வெண்சந்தனப் பளிச்சில், பச்சை நரம்பின் ஓட்டம் கொடி பிரிகிறது.

அம்பா! உன் பாத கமலங்கள் எனக்கு மட்டும்
தரிசனமா?
அப்படியானால் நீ உண்டா?
உன் பாதங்கள் தந்த தைரியத்தில்
உன் முகம் நோக்கி என் பார்வை எழுகின்றது.

ஓ, உன் முகம் அபிதாவா?

உடல் பூரா, மனம் பூரா நிறைந்த சிலம்பொலி, உலகத்தின் ஆதிமகளின் சிரிப்பா?

அபிதா, இப்போது என் பார்வையில், நீ உலகத்தின் ஆதிமகளாயின், நீ நீராட்டுவித்த ஞானஸ்னானத்தில் நான் ஆதிமகன்.

எனக்குத் தோன்றுகிறது, யாருக்குமே, ஏதோ ஒரு சமயம், இதுபோல் தரிசனம் நேரத்தான் நேர்கின்றது. மடிப்பு விரிந்தாற்போல், இதயம் திடீரென அகன்று அதனுள் எரியும் விளக்கு தெரிகிறது.

{{block_center|<poem>நான்தான் உன் பிறவியின் முழு ஒளி உன் அவதார நிமித்தம் உயிரின் கவிதாமணி நீ அறியாது, தொண்டையில் மாட்டிக் கொண்டி ருக்கும் உன் கனவின் தூண்டில் முள் தொன்றுதொட்டு உலகின் ஆதிமகன். ஆதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/109&oldid=1130557" இலிருந்து மீள்விக்கப்பட்டது