பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அபிராமி அந்தாதி

செய்வாய் நானோ இதற்கு நாயகமே" (திருவாசகம்) என்பது இங்கே ஒப்புநோக்குதற்கு உரியது.

95

கோமள வல்லியை அல்லியந்
தாமரைக் கோயில்வைகும்
யாமள வல்லியை ஏதமி
லாளை எழுதரிய
சாமள மேனிச் சகல
கலாமயில் தன்னைத்தம்மால்
ஆமள வும்தொழு வார்எழு
பாருக்கும் ஆதிபரே.

(உரை) மெல்லிய கொடி போன்றவளை, அகவிதழையுடைய தாமரையாகிய ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் யாமளாகமத்தினால் புகழப்பட்ட வலிமையுடையவளை, குற்றமற்றவளை, ஓவியத்தில் எழுதுதற்கு அரிய சாமளநிறம் பொருந்திய சகல கலைக்கும் தலைவியாகிய மயில் போன்றவளை, தம்மால் இயன்ற அளவும் உபாசிப்பவர்கள் ஏழுலகத்திற்கும் அரசர்களாவார்கள்.

யாமளம் - அம்பிகையின் பெருமையை உரைக்கும் ஆகமம்; "பரவுவன யாமளமோ", "யோகயாமளத்தினாள்" (தக்க, 113,136). சகலகலா மயில்: 21, குறிப்பு.

96

ஆதித்தன் அம்புலி அங்கி
குபேரன் அமரர்தங்கோன்
போதிற் பிரமன் புராரி
முராரி பொதியமுனி
காதிப் பொருபடைக் கந்தன்
கணபதி காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர்
போற்றுவர் தையலையே.