பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

தார்-மார்பின் மாலை. கொன்றை சிவபெருமானுக்கும், சண்பகம் அம்பிகைக்கும் உரிய மாலைகள்; சாம்பேயகுஸும ப்ரியா (435) என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. உலகேழும் பெற்றது: "புவியேழையும் பூத்தவளே" (12) என்பர் பின். ஊரருக்கும் உமைக்கும் மைந்தனே என்க. உமை: இங்கே, சிவகாமசுந்தரி; "சேரும் தலைவி சிவகாமசுந்தரி" (68). அந்தாதி யென்றது. இங்கே அந்தாதிப் பிரபந்தத்திற்குரிய சொற்பொருள் வளத்தை. கணபதியின் திருநிறம் வெண்மையென்றும் சிவப்பென்றும் கூறுவதும் உண்டு. அந்தாதி நிற்கக் கட்டுரை என்க. கட்டுரைத்தல் - பொருந்தும்படி திருவாய் மலர்ந்தருளுதல்; என்றது தம் உள்ளத்துள்ளே நின்று சொற்பொருள்களைத் தோற்றுவிக்க வேண்டுமென்று பிரார்த்தித்தபடி.

நூல்

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்
திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்
போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென்கடிக்
குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி
என்றன் விழுத்துணையே.

(உரை) உதயமாகின்ற செங்கதிரவனும். மேல் நெற்றியில் அணியும் சிந்துரத் திலகமும், ஞானம் உடையவர்கள் நன்கு மதிக்கின்ற மாணிக்கமும், மாதுள மலரும், தாமரை மலரில் எழுந்தருளிய திருமகள் துதிசெய்கின்ற மின்னற் கொடியும், மெல்லிய வாசனையையுடைய குங்குமக் குழம்பும் ஆகிய பொருள்களைப் போன்றதென்று நூல்கள்