பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

3

கூறுகின்ற திருமேனியையுடைய அபிராமியம்மை என்னுடைய மேன்மையான துணை ஆவாள்.

உதிக்கின்ற செங்கதிர்-பால சூரியன்; கண்கொள்ளும் வடிவினதாதலின் இதனை உவமை கூறினர்; 'உத்யத்பானு ஸஹஸ்ராபா' (6) என்பது அம்பிகைக்குரிய ஆயிரந் திருநாமங்களுள் ஒன்று. "வந்துதித்த வெயிலாயிருக்கும் விசும்பில்” (99) என்பர் பின். உச்சித் திலகம்: "சிந்துர வண்ணப் பெண்ணே" (6), “சிந்துர வண்ணத்தினாள்" (8), 'சிந்துர மேனியள்" (43) என்று பின்னும் கூறுதல் காண்க. திலகம்-மஞ்சாடி என்றும் கூறலாம்.


உணர்வு-மணி நூல் ஆய்ந்த அறிவு மெய்ஞ்ஞான மெனலும் ஆம். மாணிக்கம்: “மணியே மணியின் ஒளியே” (24); "மாணிக்கவல்லி" (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.1.) மாதுளம் போது: "மாதுளம்

பூநிறத்தாளை" (பயன்); “தாடிமீ குஸுமப்ரபா" (லலிதா ஸஹஸ்ரநாமம், 560). மின்கொடி: "மின்னா யிரமொரு மெய்வடிவாக விளங்குகின்ற அன்னாள்” (55); "மின்போலு நின்றோற்றம்" (61), விழுத்துணை- விழுப்பமாகிய துணை; எல்லா விடத்தும் எக்காலத்தும் துணையாக இருத்தலின் விழுத்துணை என்றார்.

1

துணையும் தொழும் தெய்வ மும்பெற்ற
தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட
வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையும்மென் -
பாசாங் குசமும்கையில்
அணையும் திரிபுர சுந்தரி
ஆவ தறிந்தனமே.

(உரை) எமக்கு உயிர்த்துணையும், யாம் தொழும் தெய்வமும், எம்மைப் பெற்ற அன்னையும், வேதமென்னும்