அபிராமி அந்தாதி
25
போன்றாய். நின்னை அணுகிய அடியவர்களது பிறவி 'நோய்க்கு மருந்து' போன்றாய், தேவர்களுக்குப் பெரிய விருந்து போன்றாய், அடியேன் நின்னுடைய தாமரை போன்ற திருவடிகளை வணங்கிய பின்னர் வேறு ஒருவரைப் பணியேன்.
அம்பிகை மாணிக்க நிறமுடையவளாதலின் மணியே என்றார். சிவபெருமானிடத்தினின்றும் வேறாகாத அருளே தன் உருவமாக நிற்றலின் மணியின் ஒளியே என்றார். பிணிக்கு மருந்து: "வெம்பாசம், மருவிய பிணிகெட மலை தரு மருமை மருந்தே”, “பிறவிப் பெரும்பிணிக்கோர் மருந்தே" (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்); ‘ஸர்வவியாதிப்ரச மனி' (லலிதா, 551). கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாதலின் விருந்தே என்றார்; ஒரு. காலைக்கு ஒருகால் புதிய அழகு பூத்துத் தோன்றுதலின் அங்கனம் கூறினார் எனலும் ஆம்; விருந்து-புதுமை.
24
பின்னே திரிந்துன் அடியாரைப்
பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்றுகொண்
டேன்முதல் மூவருக்கும்
அன்னே உலகுக் கபிராமி
என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான்மற
வாமல்நின் றேத்துவனே.
(உரை) தலைமை பெற்ற மூன்று மூர்த்திகளுக்கும் தாயே, உலகிலுள்ள உயிர்கள் பிறவிப்பிணியினின்றும் நீங்க அபிராமி யென்னும் நாமத்தோடு எழுந்தருளியிருக்கும் அரிய மருந்தே. நின் அடியார்களின் பின்னே அவரை வழிபட்டு அவருடன் திரிந்து அவரை உபசரித்துப் பிறவிப் பிணியை அறுக்கும் பொருட்டு உபாயமாகிய தவங்களை முற்பிறப்பிலே செய்துவைத்தேன்: உன்னை